திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவில் யானை குளிப்பதற்காக ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட தொட்டி- அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்…!
திருச்சி, மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் யானை லட்சுமிக்கு தேவதானம் பகுதியில் சுமார் 69 சென்ட் இடத்தில் குளிப்பதற்காக ரூ.50 லட்சம் செலவில் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. யானைக் குளிப்பதற்காக கட்டப்பட்ட குளியல் தொட்டியினை இந்து சமய அறநிலையத்துறை துறை அமைச்சர் சேகர்பாபு இன்று (05-12-2024) திறந்து வைத்தார். யானை குளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட இடத்தின் முன்பு கஜ பூஜை நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார்.
தொடர்ந்து லட்சுமி யானை குளியல் தொட்டிக்கு அழைத்து வரப்பட்டு குளிப்பாட்டப்பட்டது. மேற்கண்ட நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் மற்றும் செயல் அலுவலர் அனிதா, திருச்சி உதவி ஆணையர் லட்சுமணன், ஸ்ரீரங்கம் இணை ஆணையர் மாரியப்பன், சமயபுரம் இணை ஆணையர் பிரகாஷ், திருவானைக்காவல் உதவி ஆணையர் சுரேஷ், மாநகராட்சி கோட்டத் தலைவர் மு.மதிவாணன், அறங்காவலர்குழுத்தலைவர் பா.சீனிவாசன், அறங்காவலர்கள் மு.கருணாநிதி, ரா.கலைச்செல்வி. வி. ஸ்ரீதர், மு.கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
Comments are closed.