Rock Fort Times
Online News

திருச்சி, ஜங்ஷன் – புதிய ரயில்வே பாலப்பணிகள் துவக்கம் ! நாளை (அக்-12) முதல் போக்குவரத்து மாற்றம் !

திருச்சி ஜங்ஷன் அருகே அமைந்துள்ள பழைய ரயில்வே பாலத்துக்குப் பதிலாக புதிய பாலம் அமைக்க இரு கட்டப் பணிகள் திட்டமிடப்பட்டன. அதில் முதல் கட்டமாக அரிஸ்டோ பாலம் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. இரண்டாவது கட்டமாக, பழைய ரயில்வே பாலத்தை அகற்றிவிட்டு ரூ. 138 கோடியில் புதிய பாலம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள்  தொடங்கவிருப்பதால் நாளை ( அக்.12) இரவு 12 மணி முதல் மாற்று வழியில் போக்குவரத்து தொடங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி : சென்னை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்லும் பேருந்துகள் (நகரப் பேருந்து நீங்கலாக) டிவிஎஸ் டோல்கேட்டிலிருந்து தலைமை அஞ்சலகம், கன்டோன்மென்ட், வெஸ்ட்ரி ரவுண்டானா, ஆட்சியரகம், மிளகுபாறை வழியாக பேருந்து நிலையத்தை அடைய வேண்டும். எதிர் மார்க்கத்தில் குரு உணவகம், முத்தரையர் சிலை, டிவிஎஸ் டோல்கேட் வழியாக செல்லவேண்டும். திண்டுக்கல் செல்லும் பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மிளகுபாறை, கோரிமேடு வழியாக பாலத்தின் கீழ் பகுதியை கடந்து சர்வீஸ் ரோடு வழியாக திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். மதுரையிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வரும் பேருந்துகள், மற்றும் மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் பகுதியிலிருந்து வரும் அனைத்து இலகு ரக வாகனங்கள் அரிஸ்டோ மேம்பாலம் வழியாக வந்து , விடு முருகன் கோயில் வழியாக பேருந்து நிலையத்தை அடையவேண்டும். எதிர் மார்க்கத்தில் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை செல்லும் பேருந்துகள், மற்றும் மன்னார்புரம், எடமலைப்பட்டி புதூர் செல்லும் இலகு ரக வாகனங்கள் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காமராஜர் சிலை வழியாக வந்து அரிஸ்டோ மேம்பாலம்,மன்னார்புரம் வழியாக செல்ல வேண்டும். சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சேலம் பகுதிகளிலிருந்து திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள், மன்னார்புரம் வழியாக மதுரை சாலையில் சென்று, மணிகண்டத்தில் வலப்புரம் திரும்பி வண்ணாங்கோயிலை அடைந்து திண்டுக்கல் சாலையில் செல்ல வேண்டும். எதிர்மார்க்கத்தில் இதே பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் இதே வழியில் சென்று மன்னார்புரத்தை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும். இத்தகவலை மாவட்ட ஆட்சியரகம் தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்