Rock Fort Times
Online News

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் அதிரடி மாற்றம்: மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் நடவடிக்கை…!

கட்டப்பஞ்சாயத்து மூலம் அடுத்தவர் நிலத்தை அபகரித்தவர்கள் மீது  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், “திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஆகியோர் இணைந்து ஆபரேஷன் அகழி என்ற பெயரில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அந்தவகையில் சட்டத்திற்கு புறம்பாக,  போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பில் ஈடுபட்ட ரவுடிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களிடமிருந்து பல்வேறு சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இந்நிலையில்  பஞ்சப்பூரை  சேர்ந்த கருவண்டு பெரியசாமி என்பவர் மீது  பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இதுகுறித்து தகவல் தராமல் மறைத்த எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய  நுண்ணறிவு பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் சந்தானமூர்த்தியை உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி மாநகர காவல் ஆணையர் காமினி ஐபிஎஸ் உத்தரவிட்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்