சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தேசிய கொடியேற்றி மரியாதை…! (வீடியோ இணைப்பு)
இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா இன்று (ஆகஸ்ட் 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.அந்தவகையில் திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் வே.சரவணன் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். திருச்சி மாவட்ட அளவில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையை சேர்ந்த 25 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து 10 பயனாளிகளுக்கு ரூ.18 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளையும் ரசித்துப் பார்த்தார். விழாவில், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments are closed.