திண்டுக்கல் மற்றும் குண்டக்கல் பகுதிகளில் ரயில்வே பணிகள் காரணமாக திருச்சியிலிருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் திருச்சி- திண்டுக்கல் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயிலானது (06499) சனிக்கிழமை முதல் வருகிற 19-ம் தேதி வரை தாமரைப்பாடி திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக திண்டுக்கல்லில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் திண்டுக்கல்- திருச்சி முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயிலானது (06498) இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 20-ம் தேதி வரை திண்டுக்கல் தாமரைப்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் இந்த ரயிலானது தாமரைப்பாடியிலிருந்து காலை 6.26 மணிக்கு புறப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.