Rock Fort Times
Online News

திருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் சேவை திடீர் ரத்து…!

திருச்சி, ராமநாதபுரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்களும், மறுமார்க்கமாக அங்கிருந்து புறப்படும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தாம்பரத்தில் இருந்து டிசம்பர் 26, 28 ஆகிய தேதிகளில் மாலை
5 மணிக்கு புறப்பட்டு ராமநாதபுரம் செல்லும் சிறப்பு ரெயிலும் (வண்டி எண்.06103), மறுமார்க்கமாக ராமநாதபுரத்தில் இருந்து வருகிற 27, 29 ஆகிய தேதிகளில் காலை 10.55 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் சிறப்பு ரெயிலும் (06104) ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, திருச்சியில் இருந்து வருகிற 27, 28, 29, 31 ஆகிய தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரெயிலும் (06190), மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து வருகிற 27, 28, 29, 31 ஆகிய தேதிகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரும் அதிவிரைவு சிறப்பு ரெயிலும் (06191) ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்