Rock Fort Times
Online News

தங்க நகைக்கடன் பெற ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிமுறைகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி…!

தங்க நகைக்கடன் தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிகளால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய விதிகள்:

  • தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும். எடுத்துக்காட்டாக நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால் 75 ரூபாய் வரை மட்டுமே நகைக்கடன் வழங்கப்படும்.
  • தங்க நகை கடன் வாங்குபவர்கள் நகைக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்ற ஆதாரத்தை வழங்க வேண்டும்.
  • தங்க நகையின் தூய்மைத்தன்மை குறித்து வங்கியிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
  • குறிப்பிட்ட வகையிலான தங்கங்களுக்கு மட்டுமே நகைகடன் வழங்கப்படும்.
  • நகை 22 காரட் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.
  • வெள்ளி நகைகளுக்கும் நகைக்கடன் பெறலாம்.
  • தனிநபர்கள் ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடகு வைக்க முடியும்.
  • நகைக்கடன் ஒப்பந்தத்தில் முழுமையான தகவல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
  • நகைக்கடன் வாங்கியவர் அந்த கடனை திரும்ப செலுத்திய 7 வேலை நாட்களில் நகையை திரும்பி ஒப்படைக்க வேண்டும். 7 வேலை நாட்களில் ஒப்படைக்கவில்லையென்றால் கடன் கொடுத்தவர் (வங்கிகள்) ஒரு நாளைக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமாக கொடுக்க வேண்டும்.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.                                                                                                                                                                                                        அடுத்த மாதம் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பல ஏழை எளிய பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைப் படிக்க வைக்க நகைகளை அடமானம் வைத்து தான் கல்வி கட்டணம் செலுத்துவார்கள். ரிசர்வ் வங்கியின் இந்த புதிய விதிமுறைகளால் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்