வாக்காளர் ஓட்டுரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் பங்கேற்கிறார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்…!
ராகுலின் யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இந்த தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளார். பீஹாரில், வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் போது, 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், லாலுவின் ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பீஹாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்ய வலியுறுத்தி வாக்காளர் உரிமை என்ற பெயரில் காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் யாத்திரையை துவங்கி இருக்கிறார். இந்த யாத்திரைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ஆக.27ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.இந்த தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
அடுத்து வரக்கூடிய நாட்களில் யாத்திரையின் போது இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஆக. 26, 27ல் பிரியங்கா, ஆக.27ல் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆக.29ல் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆக.30ல் உ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு மற்றும் மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் யாத்திரையில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க இருக்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments are closed.