Rock Fort Times
Online News

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள்: 2 மணி நேரம் மட்டுமே அனுமதி…!

தமிழகத்தில் இவ்வாண்டு அக்டோபர் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில், பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம். குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் ஏற்பாடு செய்யலாம்.  அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக் கூடாது. அரசு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்