பவுர்ணமியையொட்டி நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், மணப்பாறை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், ராமேசுவரம், கரூர் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை-சென்னை வழித்தடத்தில் 50 கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.