தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி பிரிவினைவாத இயக்கம்-ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு…! ( வீடியோ இணைப்பு)
தமிழ்நாட்டில் சீமான் தலைமையில் இயங்கும் நாம் தமிழர் கட்சி, ஒரு பிரிவினைவாத இயக்கம் என்று நூற்றுக்கும் மேற்பட்ட இளம் ஐபிஎஸ் அதிகாரிகள், மாவட்ட எஸ்.பி.க்கள் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில், திருச்சி எஸ்.பி. வருண்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்த இந்த ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் பல்வேறு குழுக்களாக நாடு முழுவதுவதிலிருந்து நூற்றுக்கணக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். இளம் வயதில் எஸ்.பி.க்களாக திறம்பட செயல்படும் போலீஸ் அதிகாரிகள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பல்வேறு வகையில் குற்றத்தை தடுக்கும் யோசனைகளை குழுவிற்கு தலைமையேற்கும் ஐபிஎஸ் அதிகாரிகள் மேடையிலேயே முன் வைக்கும் வாய்ப்பு இந்த மாநாட்டில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. இதில், தமிழ்நாட்டின் இளம் எஸ்.பியாக திருச்சியில் பணியாற்றும் வருண்குமார் ஐபிஎஸ்க்கு உள்துறை செயலகம் இந்த மாநாட்டில் பங்கேற்கும் படியும், நாடு முழுவதும் உள்ள 22 ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட குழுவிற்கு தலைமையேற்று சைபர் க்ரைம், இணையதள மிரட்டல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும், அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விளக்கும்படி அறிவுறுத்தியிருந்தது. அந்தவகையில் திருச்சி எஸ்பி வருண்குமார் பேசுகையில், இதுபோன்ற சைபர் குற்றங்களால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக உள்ள தானும், தன்னுடைய குடும்பத்தினருமே தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு காரணம், நாம் தமிழர் கட்சி என்றும், இந்தியா முழுவதிலிருந்தும் பங்கேற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் பகிரங்கமாக பேசினார். மேலும் , நாம் தமிழர் கட்சியை கண்காணிக்க வேண்டும், இந்த கட்சியை சேர்ந்தவர்கள் பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் குறிப்பிட்டார். தேசிய அளவிலான ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டில் அவர் இவ்வாறு பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Comments are closed.