புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் செய்தி பின்னணி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா, திருச்சி-மதுரை பைபாஸ் சாலையிலுள்ள ஏ.ஆர்.கே மினி மஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இதழின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான அங்கு என்கிற பி.ரெங்கையா தலைமை தாங்கினார்.மூத்த பத்திரிகையாளரும் வல்லூறு பத்திரிகை ஆசிரியருமான எஸ்.என். மோகன்ராம் வரவேற்புரையாற்றினார். செய்தி பின்னணி இதழின் பொறுப்பாசிரியர் பி.ஜெயபாலன், சிறப்பாசிரியர் எஸ்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக லட்சியம் வெல்லும் இதழின் ஆசிரியர் எஸ். சதாசிவம், புதிய சகாப்தம் மாத இதழின் ஆசிரியர் என்.அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி. விஜயபாஸ்கர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றினார். ராக்போர்ட் டைம்ஸ் வார இதழின் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர் லக்ஷ்மி நாராயணன் சிறப்புரையாற்றினார். வழக்கறிஞர்கள் சரவணன், ரவிச்சந்திரன், செல்லப்பன், பிரேம்குமார், ஏ.ஜே.எஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ஜஸ்டின் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.