Rock Fort Times
Online News

அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான என்.சங்கரய்யா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13ந் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், என்.சங்கரய்யா இன்று ( 15.11.2023 ) காலை காலமானார். சங்கரய்யாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசியல் வட்டாரங்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும், இளைஞர்களும் சமூகவலைத்தளங்கள் மூலமாக மறைந்த என்.சங்கரய்யாவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இன்று பிற்பகல் 3 மணிக்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு சங்கரய்யா உடல் கொண்டு செல்லப்படவுள்ளது. இதனையடுத்து நாளை சங்கரய்யா உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில், மறைந்த முதுபெரும் தலைவர் சங்கரய்யாவின் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அரசு மரியாதையுடன் சங்கரய்யாவின் இறுதிச்சடங்கு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்