திருச்சி ராயல் குரூப்ஸ் சார்பில் திம்மராயசமுத்திரத்தில்”ராயல் பிரஸ் வாட்டர் கம்பெனி” உதயம்..!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி கல்லணை ரோடு திம்மராய சமுத்திரத்தில் திருச்சி ராயல் குரூப்ஸ் சார்பில் “ராயல் பிரஸ் வாட்டர் கம்பெனி” மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. கம்பெனியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். கம்பெனியின் நிர்வாக இயக்குனரும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மாவட்ட துணை தலைவருமான தொழிலதிபர் ராயல் சேட்டு வரவேற்றார்.


திறப்பு விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச் செயலாளர் வி.கோவிந்தராஜுலு ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். விழாவில், திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு. மதிவாணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சி மண்டல தலைவர் தமிழ்செல்வம், திருச்சி மாவட்ட தலைவர் ஸ்ரீதர், திருச்சி மாநகரத் தலைவர் எஸ்.ஆர்.வி. கண்ணன், மாநில இணை செயலாளரும், காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவருமான கமலக்கண்ணன், இளைஞர் அணி அப்துல் ஹக்கீம், செய்தி தொடர்பாளர் திருமாவளவன், குரு ஹோட்டல் மணி, கே.எம்.எஸ். ஹக்கீம் பிரியாணி உரிமையாளர் ஹக்கீம், கே. எம். எஸ். மைதீன், பெரியசாமி டவர்ஸ் உரிமையாளர் பெரியதம்பி, ஆண்டாள் சீவல் ரெங்கராஜ், வெள்ளாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் ஹரிஹரன், பார் உரிமையாளர் மகாலிங்கம் மற்றும் தி.மு.க.நிர்வாகிகள் அருள்சுந்தர்ராஜன், ஆர் .சி.பாபு, சிலம்பரசன் மற்றும் வணிகர் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறவினர்கள் நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ராயல் பிரஸ் வாட்டர் கம்பெனி உரிமையாளர் சேட்டு அனைவருக்கும் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.