நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள் பேருந்துகளை விட ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். ரயில் பயணத்தின் போது அனைத்து வசதிகளும் கிடைப்பதே இதற்கு காரணம். பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் பயணிகளின் வசதிக்காக, 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும், அது வரையில், முந்தைய கால அவகாசமே இருக்கும் என்றும், முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக 365 நாட்களுக்கான முன்பதிவு கால அவகாசத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ரயில் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Comments are closed.