இந்திய குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, திருச்சி மாவட்டத்தில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தேசிய கொடி ஏற்றி மூவர்ண பலூன்களை பறக்க விட்டு, சமாதானத்தின் அடையாளமாக இரு வெண் புறாக்களை பறக்க விட்டார். அதைத்தொடர்ந்து காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்.தொடர்ந்து சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார், நலத்திட்ட உதவிகளும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கும், 25 ஆண்டுகள் மாசற்ற பணிக்காக பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.
விழாவை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவர்களின் கண் கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில், மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் மனோகரன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.