பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் மதுரை அதிமுக பொன்விழா மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்டம் மேற்கு சட்டமன்ற தொகுதி தில்லை நகர் பகுதி சார்பில் திருச்சி பீமநகரில் பகுதி செயலாளர் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் அய்யப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம், மாவட்ட துணைச் செயலாளர்கள் வனிதா,பத்மநாதன், பகுதி செயலாளர்கள் என்.எஸ்.பூபதி, நாகநாதர் பாண்டி, கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர் வெல்லமண்டி பெருமாள் ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், அமைப்புச் செயலாளர் ரத்தினவேல், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.பூவைசெழியன், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், முன்னாள் அமைச்சர் நல்லுசாமி, மாணவரணி மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பகுதி தலைவர் அக்பர்அலி, பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ்குப்தா. ஏர்போர்ட் விஜி, என்ஜினீயர் இப்ராம்ஷா, கிருஷாந்த், கவுன்சிலர்கள் கோ.கு.அம்பிகாபதி, அரவிந்தன், முன்னாள் கோட்டத் தலைவர் ஞானசேகர், எம்.ஜே.பி.வெஸ்லி, வாழைக்காய் மண்டி சுரேஷ், கருமண்டபம் சுரேந்தர், உடையான்பட்டி செல்வம், பாலக்கரை ரவீந்திரன் , ஷாஜஹான், ஹாருண் , பொன்னர், சிந்தை ராமச்சந்திரன், டிபன் கடை கார்த்திகேயன், ரமணிலால், வட்டச் செயலாளர்கள் செல்வகுமார், வெல்லமண்டி கன்னியப்பன் உள்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில், வட்ட செயலாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.