திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகரம் பொன்மலை பகுதி திமுக செயற்குழு கூட்டம் அவைத் தலைவர் ஆறுமுக வேலையா தலைமையில் நடந்தது பொன்மலை பகுதி செயலாளர் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டு பேசினார்.

செயற்குழு கூட்டத்தில் 3.6.23 அன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடுவது, வருகிற ஏப்ரல் 3-ந் தேதி முதல் ஜூன் 3-ந் தேதிக்குள் சுமார் 10,000 உறுப்பினர்களை அனைத்து வட்டங்களிலும் இணைந்து சேர்ப்பது, வருகிற ஏப்ரல் 2-ந்தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி அனைத்து வட்டங்களிலும் கொடியேற்றி கல்வெட்டு திறப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.செயற்குழுக் கூட்டத்தில் பொன்மலை பகுதி கழக, வட்டக் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
