Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூரில் வங்கி பெண் ஊழியரிடம் 9 பவுன் சங்கிலி பறித்த இருவரை தட்டி தூக்கிய போலீசார்…!

திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்தவர் எட்வின்ராஜ். பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வித்யா ( 37 ). இவர் லால்குடியில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர், சம்பவத்தன்று அம்மன் நகர் 10வது குறுக்குசாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அங்கு மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேரில் ஒருவர் வித்யா அணிந்திருந்த 6 பவுன் தாலி செயின் மற்றும் 3 பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்று விட்டனர். இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் வித்யா புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் மேற்பார்வையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் தலைமை காவலர்கள் ஹரிஹரன், அருண்மொழி வர்மன், நல்லேந்திரன், ராஜேஷ். சதீஷ்குமார், கணேசமூர்த்தி, நிர்மல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாழவந்தான் கோட்டை பெரியார் நகரைச் சேர்ந்த அருள் மொழி மகன் மணிகண்டகுமார் (38), கடலூர் குறிஞ்சிப் பாடி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய போது, திருவெறும்பூர் மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும், இந்த சம்பவத்தில் டைட் என்பவரும் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை பற்றிய விவரங்களை புவனகிரி போலீசாருக்கு திருவெறும்பூர் போலீசார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் புவனகிரி போலீசார் அவரை கைது செய்துள்ளனர். தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட இருவரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின்படி மணிகண்ட குமாரை திருச்சி மத்திய சிறையிலும், சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான தனிப்படை போலீசாரை திருச்சி எஸ்.பி.செல்வ நாகரத்தினம், திருவெறும்பூர் ஏ.எஸ்.பி.அரவிந்த் பனாவத் ஆகியோர் பாராட்டினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்