திருச்சி, திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரர் திருக்கோவிலில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய கொடி மரங்கள்
திருச்சி, திருவானைக்கோவிலில்உள்ள பிரசித்தி பெற்ற ஜம்புகேஸ்வரர் – அகிலாண்டேஸ்வரி திருக்கோவிலில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 9 கொடி மரங்கள் புதிதாக நடப்பட்டன. இக்கோவிலில் சுவாமி சன்னதியை சுற்றிலும் அஷ்டதிக் கொடி மரங்கள் உள்ளன. இந்த கொடி மரங்கள் பழுதடைந்த காரணத்தால் கடந்த மே மாதம் 2ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு கொடிமரங்கள் அகற்றப்பட்டன. இதேபோன்று சாமி கொடி மரமும் பழுதடைந்திருந்ததால் அதுவும் அகற்றப்பட்டது. இந்நிலையில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மதுரை செல்வராஜ் ஸ்தபதி மூலம் புதிய கொடிமரங்கள் செய்யப்பட்டது. இந்த கொடி மரங்கள் இன்று காலை வேத மந்திரங்கள் முழங்க நடப்பட்டது. இது குறித்து கோவில் இணை ஆணையர் ரவிச்சந்திரன் கூறும் போது., வரும் ஐப்பசி மாதத்தில் நடப்பட்டுள்ள கொடி மரங்களுக்கு கலசங்கள் சாற்றப்படும். இதில், சாமி கொடிமரம் மற்றும் அஸ்டதிக் கொடி மரங்களில் ஒன்றான வருண பகவான் கொடிமரங்களுக்கு தங்க முலாம் பூசப்படும். மற்ற கொடிமரங்களுக்கு தாமிரத் தகட்டால் கவசங்கள் செய்யப்பட உள்ளன. வரும் கார்த்திகை அல்லது தை மாதத்தில் இந்த 9 கொடி மரங்களுக்கும் கவசங்கள் பூட்டப்பட்டு சம்பிரோஷணம் செய்யப்பட உள்ளது. தங்க முலாம் மற்றும் தாமிரத் தகட்டால் செய்யப்படக்கூடிய 9 கொடி மரங்களும் ரூ. 65 லட்சம் மதிப்பீட்டில் செய்யப்பட உள்ளது என தெரிவித்தார்
Comments are closed.