Rock Fort Times
Online News

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார், அமைச்சர் அன்பில் மகேஷ்…!

நடப்பு கல்வியாண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(நவ. 4) வெளியிட்டார். அதன்படி,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறும். 8.70 லட்சம் மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி தொடங்கி மார்ச் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 8.7 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 11-ம் வகுப்பு அரியர் தேர்வு மார்ச் 3-ந்தேதி தொடங்கி மார்ச் 27-ந்தேதி நடைபெறும். 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ந்தேதி வெளியிடப்படும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 20-ந்தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார். தேர்வு கால அட்டவணை வருமாறு;

 

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்