திருச்சியில் உள்ள ஒரு டீக்கடையில் வாங்கி வந்த போண்டாவுக்குள் 5 ரூபாய் நாணயம்: அதிர்ச்சியில் உறைந்த விளையாட்டு வீரர்கள்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி, டிவிஎஸ் டோல்கேட்டை சேர்ந்தவர் ரத்தினம் (63). இவர் தனது நண்பர்களுடன் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் த்ரோ பால் விளையாடினார்.
பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே திருச்சி – புதுக்கோட்டை சர்வீஸ் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் நண்பர்களுக்காக வடை மற்றும் போண்டா வாங்கி வந்திருக்கிறார்.
அதனை நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து தின்றபோது ஒரு போண்டாவில் 5 ரூபாய் நாணயம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே
பலகாரங்களில்
பல்லி, கரப்பான் பூச்சி கிடப்பது சகஜமாகிவிட்ட
நிலையில் போண்டாவிற்குள் ஐந்து ரூபாய் காயன்
இருந்தது ஆச்சரியத்துக்குள்ளாகி உள்ளது. போண்டாவிற்குள் ஐந்து ரூபாய் நாணயம் இருந்ததை பெரியவர்கள் கண்டதால் சுதாரித்துக் கொண்டனர். ஆனால் குழந்தைகள் வாங்கி உண்டிருந்தால் நிலைமை என்னவாக இருக்கும். ஆகவே பலகாரங்கள் தயார் செய்பவர்கள் ஜாக்கிரதையாக தயார் செய்யும் படி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி
வருகிறது.
.
Comments are closed.