Rock Fort Times
Online News

திருச்சியில், தமிழ்நாடு தனியார் துப்பறிவாளர்கள் மற்றும் புலனாய்வு நிபுணர்கள் சங்கம் சார்பில் புத்தாண்டு- பொங்கல் விழா: * ஸ்ரீரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கே.விஜய் ராஜேஷ் பங்கேற்பு!

தமிழ்நாடு தனியார் துப்பறிவாளர்கள் மற்றும் புலனாய்வு நிபுணர்கள் சங்கம் (tapdi) சார்பில் திருச்சி, தென்னூரில் உள்ள ஷான்ஸ் ஹோட்டலில் நிர்வாகிகள் காலாண்டு கூட்டம் மற்றும் 2026 புத்தாண்டு, பொங்கல் விழா ஜனவரி 3ம் தேதி மாலை சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு சங்கத்தின் தலைவர் என்.மாதையன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.சுகுமார், செயலாளர் கே.வி.சர்ச்சில், பொருளாளர் எம்.பி.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கே.விஜய் ராஜேஷ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை, சான்றிதழ், நினைவுப் பரிசு ஆகியவற்றை வழங்கினார்.

இதில், சங்கத்தின் கோட்பாடுகள் குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சங்கத்தின் சட்ட ஆலோசகராக வழக்கறிஞர் மாரியப்பன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டார். விழாவில், தமிழ்நாடு தனியார் துப்பறிவாளர்கள் மற்றும் புலனாய்வு நிபுணர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் திருச்சி டைகர் மதனகோபால் சிறப்பாக செய்திருந்ததோடு முடிவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்