திருச்சி மாவட்டம் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட எம்.ஆர்.பாளையம் காப்பு காட்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் யானைகள் மறுவாழ்வு மையம் அமைந்துள்ளது. இங்கு, கோவில் யானைகளும், தனியார் யானைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ( 18.09.2023 ) விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் ஐ.எப்.எஸ்.மற்றும் மாவட்ட வன அலுவலர் கிரண் ஐ. எப்.எஸ்.அறிவுறுத்தலின்படி, உதவி வன பாதுகாவலர் சம்பத் குமார், சரவணகுமார் தலைமையில் வனச்சரக அலுவலர்கள் சுப்பிரமணியம், கிருஷ்ணன் மற்றும் வன ஊழியர்கள் விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தி யானைகளுக்கு பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை, கரும்பு மற்றும் , தர்பூசணி, அன்னாசி, முலாம்பழம் கொடுத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.