திருச்சி மாநகர மாவட்ட அஇஅதிமுக செயலாளா் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது – கழக பொதுச்செயலாளர், நாளைய தமிழக முதல்வர், புரட்சிதமிழர் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க, என்னுடைய வாழ்வு மக்களுக்காக அர்பணிக்கப்பட்ட தவ வாழ்வு மக்களுக்காக நான்… மக்களுக்காகவே நான்… என்கிற உயர்ந்த சிந்தனையோடு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்து… மறைந்தும் மறையாமலும் நம்மையெல்லாம் வழிநடத்தும் கழத்தின் காவல்தெய்வம், இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மாவின் 7-ஆம் ஆண்டு நினைவுதினம் வருகின்ற 5.12.2023 செவ்வாய்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் நமது திருச்சி மாநகர் மாவட்ட கழக சார்பில், நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது. மேற்கண்ட நிகழ்ச்சியில் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டுமாறும், திருச்சி மாநகர மாவட்ட கழகத்திற்கு உட்டபட்ட அனைத்து கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படங்களை வைத்து அஞ்சலி செலுத்தி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளாா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.