Rock Fort Times
Online News

ஏழை, எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தது திமுக அரசு தான்-அமைச்சர் பெரிய கருப்பன்…!

.தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் எண்ணற்ற திட்டங்கள் கொண்டுவரப்பட்டன என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர்
கே.ஆர்.பெரிய கருப்பன் கூறினார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருச்சி தெற்கு மாவட்டம், கிழக்கு மாநகரம், மலைக்கோட்டை பகுதி சார்பில் நடைபெற்றது. மலைக்கோட்டை பகுதி செயலாளர் மோகன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெரிய கருப்பன், கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், தமிழகத்தில் எத்தனையோ கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் பதவி வகித்தாலும் திமுக முதல்வர்களின் ஆட்சிதான் பிற மாநிலத்தவர்களையும் ஏங்க வைத்த ஆட்சி என்றால் மிகையில்லை. குறிப்பாக முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி, சமூக விஞ்ஞானியாக அழைக்கப்பட்டவர். அவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் கொண்டு வந்த மக்கள் நலத்திட்டங்களால், ஏழை எளிய மக்கள் வாழ்வு மேம்பட வழிவகுத்தது. கிராமங்கள்தோறும் மின்சார வசதி, போக்குவரத்து, கிராமப்புற சாலைகள் என அனைத்து திட்டங்களையும் செயல்படுத்திவர். எனவேதான் அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்து வருகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இவ்வாறு அவர் பேசினார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், முத்தமிழ் அறிஞர் கருணாநிதி தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கிய ஒரே தலைவர். அவரது வழியில் தற்போது தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி செய்துகொண்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இது மகளிருக்கான ஆட்சி. மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கான இலவச பேருந்து, சுய உதவிக்குழுக்களுக்கான கடன் தள்ளுபடி உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.எனவே தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என். சேகரன், மாநகராட்சி துணை மேயர் ஜி. திவ்யா தனக்கோடி, மாவட்ட நிர்வாகிகள் செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, சந்திரமோகன், வட்டச்செயலாளர் இளங்கோ, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் உதயகுமார், மாநகர தொண்டரணி அமைப்பாளர் தினகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் முத்து தீபக், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சிந்துஜா மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்