Rock Fort Times
Online News

பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி- திருவனந்தபுரம், செங்கோட்டை- மயிலாடுதுறை, நாகர்கோவில்- மும்பை, கன்னியாகுமரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்…!

கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆரல்வாய்மொழி, என்பனக்குடி பகுதிகளில் புதிய சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக திருச்சி- திருவனந்தபுரம் சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது (22627) வருகிற 23-ம் தேதி திருநெல்வேலி – திருவனந்தபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-திருநெல்வேலி இடையே மட்டும் இயங்கும். மறுமார்க்கமாக, திருவனந்தபுரம் சென்ட்ரல் – திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது (22628) வருகிற 23 ம் தேதி திருவனந்தபுரம்- திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருநெல்வேலியிலிருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும். இதேபோல திண்டுக்கல்லில் பொறியியல் மற்றும் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வருகிற 24, 25, 26, 27, 28, 29 ஆம் தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக இயக்கப்படும். நாகர்கோவில்- மும்பை சிஎஸ்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது (16352) வருகிற 24, 27 ம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி-ஹவுரா விரைவு ரயிலானது (12566) வருகிற 26 ஆம் தேதி மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிர்த்து, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை திருச்சி வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்