திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கீழ மணக்காலில் உள்ள லால்குடி அன்பில் சாலையில் இருந்த பழமையான புளியமரம் ஒன்று காற்றுடன் கூடிய மழையால் வேரோடு சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபு தலைமையில் வீரர்கள் ராஜா, சாகுல் ஹமீது, மனோஜ் குமார், சசிக்குமார் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் சாலையில் விழுந்த புளிய மரத்தை அகற்றினர்.

பின்னர் அப்பகுதியில் போக்குவரத்து தொடங்கியது. மரம், சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மரம் முழுமையாக அகற்றப்பட்டதும் மின் வினியோகம் செய்யப்பட்டது

Comments are closed, but trackbacks and pingbacks are open.