கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். இவர், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க.வினர் இல்ல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, புதுக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சின்னையாசத்திரம் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் காரும், லோடு ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சரக்கு வேனில் வந்த பால்ராஜ் மற்றும் காரில் வந்த புதுக்கோட்டை ஒன்றிய தி.மு.க.செயலாளர் ராமகிருஷ்ணனின் தந்தை கலியமூர்த்திக்கும் காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட விஜயபாஸ்கர், அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து தனது காரில் ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தி.மு.க. பிரமுகர் என்பதையும் பார்க்காமல் மனித நேயத்துடன் அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சம்பவம் பொது மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.