திருச்சிமாவட்டம், மணப்பாறை அருகே உள்ள மாலைபட்டியை சேர்ந்தவர் சக்திவேல்( வயது 27). வையம்பட்டி அருகே குளத்துபட்டியை சேர்ந்த சுப்ரமணி மகள் கெளசல்யா(20). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன், மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில மாதங்களாக தாய் வீட்டில் வசித்து வந்த கெளசல்யா, குழந்தையுடன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கணவன் வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திடீரென கெளசல்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையறிந்து அதிர்ச்சியடைந்த கெளசல்யாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சக்திவேல் குடும்பத்தாரிடையே தகராறு செய்ததாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவயிடத்துக்கு சென்ற மணப்பாறை போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒன்றரை வருடத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்த உள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.