பேரரசர் பெரும்பிடுகு முத்திரையர் 1350 ஆவது சதய விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் சமுதாய அமைப்புகளும் அண்ணாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சியை கண்டோன்மென்ட் ஒத்தக்கடை பகுதியில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையீரின் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்., அமலாக்கத்துறை சோதனை வந்ததால் தான் முதலமைச்சர் மோடியை சந்திக்க செல்கிறார். மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாதவர் இந்தாண்டு செல்வது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.
Comments are closed.