தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்காவிட்டால் போராட்டம்- திருச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…!
திருச்சியில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், மணமக்கள் இருவரும் இரு மொழி கொள்கையில் படித்து இன்று நல்ல முறையில் இருப்பவர்கள். இந்த திருமணம் சுய மரியாதை திருமணம். கலப்பு திருமணம். மத்திய பா.ஜ.க அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது 6000 கோடி ரூபாய் நிதி கேட்டால் வழங்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு என்கிற பெயரை கூட பட்ஜெட்டில் கூறவில்லை. மும்மொழி கொள்கையை படிக்க வேண்டும் என கூறி இந்தியை திணிக்கிறார்கள். இந்தியை படித்தால் தான் நிதி என கூறி நமக்கான நிதியை வழங்கவில்லை. இந்த பிரச்சனை திமுக பிரச்சனை கிடையாது. இது மாணவர்களின் பிரச்சனை. நம் உரிமையை கேட்டால் அதை தர மறுக்கிறார்கள். நிதியை தர வில்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம். மொழி உரிமை, கல்வி உரிமை எவ்வளவு முக்கியம் என்பதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். திருமண விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் எம்.பி.க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.