Rock Fort Times
Online News

புயலின் தாக்கத்தால் கேரளாவில் 4ம் தேதி வரை கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை …!

பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கேரளாவில் வருகிற 4-ந் தேதி தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அதன்படி சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது. பனிமூட்டமும் இருந்தது. அவ்வப்போது மழை சற்று ஓய்ந்தாலும், மீண்டும் மழை வலுத்து வருகிறது. தற்போது ஐயப்பன் சீசன் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் 18-ம் படி ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இரவு வரை மழை தொடர்ந்து பெய்ததால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர். இனி வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) சபரிமலை, பம்பை, எருமேலி ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்றும், 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இந்தநிலையில் பம்பா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் ஆறுகளில் இறங்கவும், குளிக்கவும் தடை விதித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். சபரிமலை உள்ளி சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் கனமழையால் பம்பை ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்