த.வெ.க மாநாடு : திருச்சியில் 6 ஆயிரம் பேருக்கு ஆவி பறக்க தயாராகும் உணவு ! வி.எல்.ஸ்ரீனிவாசன் ஏற்பாடு!
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழக முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்டி அருகேயுள்ள வி.சாலையில் நாளை ( அக்.27 ) பிரமாண்டமாக நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் மாநாட்டில் கலந்து கொள்ளும் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கான உணவு தயாரிக்கும் பணி, திருச்சி சின்ன செட்டி தெருவிலுள்ள மாவட்ட இளைஞரணி தலைவர், வழக்கறிஞர் வி.எல். ஸ்ரீனிவாசன் முன்னிலையில் தடபுடலாக தயாராகி வருகிறது. இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறும்போது., நாளை விக்கிரவாண்டியில் எங்கள் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நடைபெறவுள்ள மாநாடு, தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது.திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் மட்டும் 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் சுமார் 2500க்கும் மேற்பட்டவர்கள் செல்லவுள்ளோம். மாநாட்டில் கலந்துகொள்ளும் தொண்டர்கள் பசிபோக்குவதற்காக 4 ஆயிரம் புளிசாதம் மற்றும் 2 ஆயிரம் லெமன் சாதங்கள் பார்சல் செய்யப்பட்டு அந்தந்த பகுதி பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றார்.

Comments are closed.