ஆயுதபூஜை, விஜயதசமியை யொட்டி இன்றும், நாளையும் 2,900 சிறப்பு பேருந்து களை இயக்க போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி,
சென்னையில் இருந்து இன்று(9-10-2024) 700 சிறப்பு பேருந்துகளும், நாளை 10-ம் தேதி 2 ஆயிரம் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரத்தில் இருந்து இயக்கப்படவிருக்கின்றன. இதுதவிர தமிழகத்தின் முக்கிய பகுதிகளில்இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இன்று தமிழகம் முழுவதும் பயணிக்க 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். அந்தவகையில் சென்னையில் இருந்து பயணிக்க 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதேபோல், நாளை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பயணிக்கவும், ஒட்டுமொத்தமாக 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது,“பயணிகள் வசதிக்காக போதியபேருந்துகள் இயக்க திட்டமிட்டுள் ளோம். குறிப்பாக நள்ளிரவு 12 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை பயணிகளின் பாதுகாப்பு கருதி, மிக குறைவான பேருந்துகள்தான் இயக்கப்படும். அதன்பிறகு அதிக பேருந்துகள் இயக்கப்படும் என்றனர். இதற்கிடையே, ஆம்னி பேருந்துகளில் அதிகளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பயணிகள் கூறும்போது, “சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லகுறைந்தபட்சம் ரூ.1,500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குடும்பத்தினருடன் சென்றால் குறைந்தபட்சம் ரூ.9 ஆயிரம் செலவிட வேண்டியிருக்கிறது. கட்டண விவகாரத்தில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதுகுறித்து ஆம்னி பேருந்துஉரிமையாளர்கள் கூறும்போது, “அரசிடம் அனுமதிபெற்ற கட்டணத்தை தான் நிர்ணயித்து உள்ளோம். கூடுதலாக நிர்ணயம் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்றனர்.
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
Now Playing
1
of 946
Comments are closed.