குவைத்தில் உள்ள என்.பி.டி.சி. கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியாவை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் உயிரிழந்து விட்டதாகவும், சிலரின் கதி என்ன ஆனது என்று தெரியாமல் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் திருச்சி மாவட்டம், நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்த ராஜு (வயது 54) குவைத்தில் பணிபுரிந்து வந்தார். அவரும் இந்த தீ விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. ஆனால், அவரது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் குவைத்தில் உள்ள சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு தொடர்பு கொண்டு கேட்டபோது ராஜு உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அரசு தரப்பில் எந்த ஒரு தகவலும் இதுவரை வரவில்லை. ராஜு உயிரிழக்கவில்லை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர். எனவே, ராஜீ உயிருடன் உள்ளாரா இல்லையா?, அவர் குறித்த தகவல்களை உடனடியாக தெரிவிக்க வேண்டுமென அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments are closed.