திருச்சியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 11 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி கொள்ளை…
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருச்சி காட்டூர் விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாலச்சந்தர் ( வயது 48). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பொது மேலாளராக பணியாற்றி வருகிறார்.
காட்டூரில் உள்ள வீட்டில் அவரது மனைவி விஜயலட்சுமி (43), மகன்கள் விஜய், சங்கர் ஆகிய 3 பேரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி கணவரை பார்ப்பதற்காக விஜயலட்சுமி, மகன்களுடன் ஓசூருக்கு சென்றிருந்தார். பின்னர் 26ம் தேதி மாலை வீடு திரும்பிய போது காம்பவுண்ட் கேட் திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் நகை, 3 கிலோ வெள்ளி,ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் , அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்தநிலையில் அதே வீட்டின் மாடியில் உள்ள ஒருவர் வீட்டிலும் கொள்ளை முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அந்த வீட்டில் எதுவும் திருட்டு போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.