கடந்த 1991 முதல் 1996ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தவர் செல்வகணபதி. இவர் தமிழகம் முழுவதும் சுடுகாட்டுக்கு கூரை அமைத்ததில் ரூ.23 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம் செல்வகணபதி, ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த 2014ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை எதிர்த்து செல்வகணபதி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த நவம்பர் 9ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், செல்வகணபதி மேல்முறையீடு வழக்கில் இன்று(28-11-2023) தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதிக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.