முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மத்திய மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் புருஷோத்தமன்,
மாவட்ட தலைவர் இளங்கோவன் ஏற்பாட்டில் மாபெரும் பேச்சுப்போட்டி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று (22-10-2023) நடைபெற்றது. இதில், பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தொழில்நுட்பக் கல்விக்கு தோள் கொடுத்த கலைஞர், தொழில்துறையை உயர்த்திய தமிழினத் தலைவர், திராவிட மாடலும் திறன்மிக்கக் கல்வியும், தெற்கு சூரியன், கலைஞரும் தமிழும் என்ற 5 தலைப்புகளின் கீழ் பேச்சுப்போட்டி நடந்தது. திருச்சி மத்திய மாவட்ட, திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் நடுவர்களாகவும், தலைமை நடுவராக கவிஞர் நந்தலாலா பங்கேற்றனர். போட்டியில் முதல் இடம் பிடித்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் பரிசாகவும் , இரண்டாம் இடம் பிடித்தவருக்கு 5 ஆயிரம் ரூபாய், 3 -ம் இடம் பிடித்தவருக்கு 3500 ரூபாயும் வழங்கப்பட்டது .மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் சென்னையில் மாநில அளவில் நடைபெறும் பேச்சு போட்டியில் பங்கேற்கின்றனர். இதில் துணை அமைப்பாளர் கிராப்பட்டி திருப்பதி, திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் சண்முகநாதன், சக்திவேல் உள்ளிட்ட பொறியாளர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.