திருச்சி மயில் மார்க் மிட்டாய் கடை உரிமையாளர்களில் ஒருவரான எம்.ராஜபாண்டியின் 6-ம் ஆண்டு நினைவு தினம்- திருவுருவ படத்திற்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை…!
திருச்சி பூர்வீக மயில் மார்க் மிட்டாய் கடையின் உரிமையாளர்களில் ஒருவரும், திருச்சி மாவட்ட திமுக பிரதிநிதியுமான மறைந்த எம்.ராஜபாண்டியின் 6ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.08) அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து அவரது இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர் தூவி மரியாதை செய்தார்.
மேலும், 600 பேருக்கு அறுசுவையுடன் அன்னதானமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருச்சி கிழக்கு மாநகர திமுக செயலாளரும், மண்டல தலைவருமான
மு.மதிவாணன், மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளர் மருந்து கடை மோகன், 13வது வார்டு திமுக கவுன்சிலர் மணிமேகலை ராஜபாண்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை மலைக்கோட்டை பகுதி திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மயில் குணா ராஜபாண்டி மற்றும் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
***
Comments are closed.