Rock Fort Times
Online News

பலத்த மழையால் சென்னையில் 40 விமானங்கள் தாமதம்…

சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கனமழையால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய டெல்லி, கொச்சி, புனே, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரம், கோவா, திருச்சி உள்பட 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதேபோல் சென்னைக்கு வரவேண்டிய திருச்சி, சூரத், சீரடி, மதுரை, லக்னோ உள்பட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. இதனால் பயணிகளும், அவர்களை வரவேற்க வந்த உறவினர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழை பெய்து கொண்டே இருந்ததால் விமான சேவை சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்