Rock Fort Times
Online News

கன்னியாகுமரியில் ஆலய திருவிழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் பலி…!

கன்னியாகுமரியில் ஆலய விழாவில் மின்சாரம் தாக்கி  4பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரியின் புத்தன்துறை கிராமத்தில், கிறிஸ்தவ திருவிழாவில் நடக்கும், தேர் பவனிக்காக சிலர் அலங்கார வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஏணியை அவர்கள் உயர்த்தி பிடித்தனர். அப்போது, அங்கிருந்த உயர் அழுத்த மின்கம்பியின் மீது ஏணி உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் பின்றோ, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்