Rock Fort Times
Online News

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 12 ஆயிரத்து734 பயனாளிகளுக்கு ரூ. 63 கோடியே 36லட்சத்து 21ஆயிரம் மதிப்பீட்டிலான நல திட்ட உதவிகளை அமைச்சர் கே.என். நேரு வழங்கினார்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் ,நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் தமிழ்நாடு அரசு ஈராண்டு சாதனை மலர் வெளியீட்டு நிகழ்ச்சி , பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, அரசு நல திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. அதில், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 10கோடியே 5 லட்சம்63 ஆயிரம் மதிப்பிட்டில் முதலமைச்சரின் கிராமசாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கிழ் 125 சாலை அமைக்கும் பணிகள் 6கோடியே 43 லட்சம் மதிப்பிட்டில் 39 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் அமைக்கும் பணிகள் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 13கோடியே 6லட்சம் மதிப்பிட்டில் முதலமைச்சரின் காலை .உணவுத்திட்டத்தின் கீழ் 230 வைப்பறையுடன் கூடிய புதிய சமையலறை கட்டும் பணிகள் ஆதிதிராவிடர் குடியிருப்புக்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3கோடியே 6லட்சம் மதிப்பீட்டில் 48 குடியிருப்பு மேம்பாட்டு பணிகள் ஆகமொத்தம் 12கோடியே 2லட்சத்து 60ஆயிரம் 63 மதிப்பீட்டில் 442 பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி 50 ஆயிரமும், 2000பயனாளிகளுக்கு ரூ. 20கோடி 18லட்சத்து 72ஆயிரம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 156 பயனாளிகளுக்கு 18 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டிலான ஓய்வூதியம், ஆகமொத்தம் ரூ. 20கோடியே 18லட்சத்து 72 ஆயிரம் மதிப்பீட்டில் 2156 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஆக மொத்தம் ரூ.63 கோடியே 36லட்சத்து 21ஆயிரம் மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் தொடங்கி வைத்து,12 ஆயிரத்து 734 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

இதில் மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன், திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவண சுந்தர்,  மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் ,சட்டமன்ற உறுப்பினர்கள் காடுவெட்டி, தியாகராஜன், பழனியாண்டி, சௌந்தரபாண்டியன், இனிகோ இருதயராஜ், கதிரவன்,மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்