ராசிக்கு 8ம் இடத்தில் சந்திரன் உலவும் இரண்டே கால் நாளும் கெடுதலாகாது. சந்திரன் அடிப்படையில் சுப நட்சத்திரத்தில் உதவும்போது, சந்திரன் 8ல் இருந்தாலும் நலமே உண்டாகும். சந்திரன் 8ல் இருந்து, சுப கிரகங்களான குரு, சுக்கிரன் ஆகியோருடன் கூடும்போது திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மேலும் சந்திராஷ்டம தினங்களில் மனோகரரான சந்திரனை தியானித்து வழிபடுவதால் நம்முடைய மன சஞ் சலங்கள் யாவும் நீங்கி நலம் பெறலாம்.
திங்கள்கிழமைகளில் சந்திரனை மனதில் நினைத்து இந்த துதி பாடலை படித்து வழிபட சகலமும் நலமாகும். அமிர்தத்துக்கு இருப்பிடமான சந்திர பகவானே போற்றி, சோமனே போற்றி, வெள்ளை கிரகங்கள் உடையவரே போற்றி, ஆழ்கடலில் உருவானவரே, ஆம்பல் பூவிடத்தில் பேரின்பம் கொண்டவரே, உலகங்களுக்கெல்லாம் பிரியமானவரே, ரோகிணியின் நாயகரே போற்றி, போற்றி. அனுதினமும் இந்த பாடலை படித்து சந்திரனை வணங்கி வழிபடுவது விசேஷம். இதனால் நாம் விரும்பும் கோரிக்கைகள் யாவும் தடையின்றி நிறைவேறும் எப்போதும் சந்திர பலம் நிறைந்திருந்து நம் சங்கடங்கள் யாவும் விலகும்.