இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணி தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி விமான நிலையம் பல்வேறு சாதனைகளை புரிந்து உள்ளது. கடந்த டிசம்பர் 23 வரை 12.80 லட்சம் பயணிகளை கையாண்டு உள்ளோம். 6000 பயணிகளை நாளொன்றுக்கு கையாண்டு வருகிறோம். இதன்மூலம் ₹ 117 கோடி வருவாய் ஈட்டி உள்ளோம். பிரதமர் மோடி புதிய விமான நிலையத்தை திறந்து வைத்தது பெருமை என்றார். பின்னர் மத்திய பாதுகாப்பு படை வீரர்களின் துப்பாக்கிகளை கையாளும் நிகழ்ச்சி மற்றும் மோப்ப நாய்களின் நுண்ணறிவு திறன், சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அப்போது நாய்கள் பல்வேறு சாகசங்கள் செய்ததோடு நெருப்பு வளையத்துக்குள் புகுந்து வெளியே வந்தன. இதனை பார்வையர்கள் பார்த்து வியந்தனர். பின்னர் குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற விமான நிலைய ஊழியர்களுக்கு இயக்குனர் சுப்பிரமணி பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்த நிகழ்வில் விமான நிலைய அதிகாரிகள், விமான நிலைய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.