Rock Fort Times
Online News

லால்குடி அருகே துயர சம்பவம்: கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை…!

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ்(46). இவரது மனைவி சுமித்ரா(38). இந்த தம்பதியின் மகன் முருகானந்தம். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோர் வசித்து வந்த வீட்டை காலி செய்யும்படி முருகானந்தம் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன், மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று விஷத்தை குடித்துவிட்டு வீட்டில் மயங்கி கிடந்தனர். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். சுமித்ராவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதுகுறித்து ரமேஷின் தந்தை நடராஜன் கொடுத்த புகாரின்பேரில் கல்லக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்