Rock Fort Times
Online News

லாரி டிரைவர் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம்: இலங்கை வாலிபர் உள்பட 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை….!

திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 9- வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சோலை பாண்டியன்( வயது 60). காந்தி மார்க்கெட்டில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மல்லிகா. மகன் சுரேஷ் குமார்(26). இவர்கள் 3 பேரும் சம்பவ தினத்தன்று இரவு சாப்பிட்டு விட்டு படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவு 12 மணி அளவில் சுரேஷ்குமார் படுத்திருந்த படுக்கை அறை பகுதியில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது அறையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஜன்னல் திரை மட்டும் எரிந்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் கண்டோன்மென்ட் உதவி போலீஸ் கமிஷனர் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக சோலை பாண்டியன் வீட்டில் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ஒரு நபர் மற்றும் இலங்கை வாலிபரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

🔴LIVE : திருச்சி துறையூரில் கலைஞர் சிலை திறப்பு விழா துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

1 of 919

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்