கரூர் மாவட்டம் கடவூர் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 51). விவசாயியான இவர் திருச்சியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக மணப்பாறை பஸ் நிலையம் வந்தார். பின்னர், அவர் திருச்சி செல்லும் பஸ் நிறுத்த பகுதிக்குச் சென்றார். அப்போது 3 மர்ம நபர்கள் அவர் மீது மயக்க மருந்தை தெளித்து மயங்கச் செய்தனர். அடுத்த சில நிமிடங்களில் அவர் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் சங்கிலி , அரை பவுன் மோதிரம், ரூ. 1000 ரொக்கம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது தான் அணிந்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனதை அறிந்து கன்னியப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மணப்பாறை போலீசில் அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Comments are closed, but trackbacks and pingbacks are open.