# Rockfort Times > Online News ## Posts - [மோடி, அமித்ஷாவால் முதல்வர் ஸ்டாலினை மிரட்டி பணிய வைக்க முடியாது...- துறையூர் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேச்சு..!](https://rockforttimes.in/modi-and-amit-shah-cannot-intimidate-chief-minister-stalin-into-submission-rahul-gandhis-speech-at-thuraiyur-public-meeting/): திருச்சி மாவட்டம், துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று (ஏப்ரல் 18) பங்கேற்று பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அடிப்படையில் மிக வித்தியாசமான தேர்தல். பாஜக அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அகற்றிவிட்டு, ஒரு பொம்மை முதல்வரை அமர வைக்க முயற்சிக்கிறது. அதிமுக ஒரு சிறந்த கட்சியாக இருந்தது. ஆனால், தற்போது அந்த நிலை மாறிபோய் பாஜகவின் முகமூடியாக மாறி விட்டது. தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என்று பாஜகவுக்கு நன்றாக தெரியும். மகளிர் மசோதாவை பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை கொண்டு வரப் பார்த்தனர். […] - [அறிவற்ற எதிர்ப்பின் காரணமாக மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பை தமிழகம் இழந்துவிட்டது...* முதல்வர் ஸ்டாலின் மீது இபிஎஸ் சாடல்..!](https://rockforttimes.in/tamil-nadu-has-lost-20-more-parliamentary-seats-due-to-ignorant-opposition-eps-attack-on-chief-minister-stalin/): அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: “தமிழ்நாடு தனது அரசியல் அதிகாரத்தை அதிகரிப்பதற்கும், தனக்குரிய பங்கான மேலும் 20 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களைப் பெறுவதற்கும் கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டது. பிரதமர் மோடியால் வழங்கப்பட்ட பொன்னான வாய்ப்பை நாம் இழந்துவிட்டது மட்டுமல்ல, 50% கூடுதல் இடங்களைப் பெற வாய்ப்பிருந்தது. ஆனால், அந்த வாய்ப்பின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளாமல், மு.க.ஸ்டாலின் அதை கண்மூடித்தனமாக எதிர்த்தார். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டிருந்தால், நாம் 9 நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை இழந்திருப்போம். இந்த மசோதாவிற்கு நீங்கள் காட்டிய அறிவற்ற எதிர்ப்பின் காரணமாக, இப்போது தொகுதி மறுவரையறை 2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்படும். நாம் இன்னும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர் இடங்களை இழப்போம். மேலும், 1998-ல், ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் தலைமையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்தார். அப்போது இந்தியக் […] - [அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு த.வெ.க. வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதா?- திமுகவுக்கு விஜய் கண்டனம் !](https://rockforttimes.in/is-it-putting-pressure-on-tvk-candidates-by-holding-officials-in-their-hands-vijay-condemns-dmk/): அதிகாரிகளை கையில் வைத்துக்கொண்டு த.வெ.க. வேட்பாளர்களுக்கு ஆளுங்கட்சி நெருக்கடி கொடுப்பதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது. பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் திமுகவுக்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு. தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் திமுக அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும், நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது. கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் […] - [மத்திய அரசு ஊழியர்களுக்கு 'ஹேப்பி நியூஸ்': 2% அகவிலைப்படி உயர்வு..!](https://rockforttimes.in/happy-news-for-central-government-employees-2-dearness-allowance-hike/): மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டிய அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வு அறிவிப்பு இன்னும் வெளியாகாத நிலையில், பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, உடனடி தீர்வு காண கோரிக்கை வைத்து கடிதம் எழுதின. இந்நிலையில், விலைவாசி உயர்வு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்துவதற்கு  அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி கடைசியாக அக்டோபர் மாதம் திருத்தப்பட்டபோது, அது 55 சதவீதத்திலிருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. - [தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாற்றை பாஜக அழிக்க நினைக்கிறது...* பொன்னேரியில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு!](https://rockforttimes.in/bjp-wants-to-destroy-tamil-language-culture-and-history-rahul-gandhis-accusation-in-ponneri/): தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. மே 4-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே இருப்பதால் தேசிய தலைவர்களும் தமிழகம் வருகை தந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று(18-04-2026) ராகுல்காந்தி எம்பி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு, காலை 11.10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்கு சென்றார். பொன்னேரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது ராகுல்காந்தி பேசியதாவது:- தமிழ்நாட்டு மக்களின் மீதும், தமிழ் மொழியின்மீதும் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும், என் குடும்பம் தமிழ்நாட்டிலிருந்து வராவிட்டாலும் தமிழ் மண்ணை சேர்ந்தவனாகவே உணர்கிறேன். தமிழ் மக்களின் மீதான தாக்குதல் என் மீதான தாக்குதல் போன்றது. இவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் தமிழ் கலாசாரம் மீது […] - [திருச்சியில் நாளை(ஏப்.19) விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள 27 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி!](https://rockforttimes.in/police-give-permission-to-vijay-to-campaign-in-trichy-tomorrow-april-19-with-27-conditions/): தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியில் நேற்று வீடு, வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், நாளை(ஏப்.19) திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் நாளை மதியம் 2 மணியளவில் திருச்சிக்கு வருகை தரும் விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட விமான நிலையம் அருகே உள்ள வயர்லெஸ் சாலை, கே.கே.நகர் பேருந்து நிறுத்தம், கொட்டப்பட்டு ஆகிய இடங்களில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பின்னர் அவர், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை தொகுதிக்குள் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் காவல் துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில் திருச்சியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள 27 நிபந்தனைகளுடன் மாநகர காவல் துறையினர் அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. - [செங்கோட்டையனுக்கு எதிராக அவரது மனைவியே ஜெயலலிதாவிடம் விவகாரமான புகாரை அளித்தார்... * கோபி தொகுதியில் இபிஎஸ் பரபரப்பு பேச்சு !](https://rockforttimes.in/sengottaiyans-wife-filed-a-serious-complaint-against-him-with-jayalalithaa-eps-gave-a-sensational-speech-in-the-gobi-constituency/): தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.பி. பிரபுவை ஆதரித்து இன்று (18.04.2026) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “மாவட்ட ஊராட்சிக் குழு தலைவரே கட்சியை விட்டுப் போகிறார் என்றால் இவர் எப்படிப்பட்டவரா இருப்பார்?. அவ்வளவு கீழ்த்தரமா பேசக்கூடிய மனிதர் செங்கோட்டையன். அவருக்கு மரியாதை கொடுப்பது எல்லாம் பிரயோஜனம் இல்லை. மரியாதை இல்லாத ஒரு மனிதர். ஜெயலலிதா இவருக்கு அமைச்சராக பதவி கொடுத்தபோது, செங்கோட்டையனுடைய மனைவியும், மகனும், தலைமை செயலகத்துக்கு வந்து ஜெயலலிதாவிடம் புகார் கொடுத்தார்கள். அது கேவலமான புகார். நான் இந்த பதவியில் இருப்பதால் அதை சொல்லவில்லை. அது என்ன குற்றச்சாட்டு என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். […] - [துபாயில் இருந்து திருச்சிக்கு மீண்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை...!](https://rockforttimes.in/air-india-express-resumes-flight-service-from-dubai-to-trichy/): மத்திய கிழக்கு போர் பதற்றம் காரணமாக அமீரகத்திற்கு வெளிநாட்டு விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதில், இந்தியாவில் இருந்து விமான சேவை அளித்து வரும் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ போன்ற நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி 28-ந் தேதி முதல் முழு வர்த்தக ரீதியிலான சேவைகளையும் ரத்து செய்தன. இருந்தாலும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. போர் பதற்றம் தீவிரமடைந்ததால் அந்த சேவையும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இதில் முன்னதாக வருகிற மே மாதம் 1-ந் தேதி முதல் முழுமையான சேவைகள் தொடங்கும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது. இந்தநிலையில் இன்று (18-04-2026) முதல் துபாயில் இருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணையதள முன்பதிவும் தொடங்கப்பட்டுள்ளது. கட்டணம் சற்று அதிகமாக இருந்தாலும் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டதற்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். துபாயில் இருந்து ஐ.எக்ஸ் […] - [திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை( ஏப்.19) விஜய் பிரச்சாரம்?](https://rockforttimes.in/vijay-campaigning-in-trichy-east-constituency-tomorrow-april-19/): தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். த.வெ.க. தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். கடந்த 2-ந் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்த அவர், அன்றைய தினமே மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே பிரச்சாரம் செய்தார். அதன்பிறகு மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு. அங்கு போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திருச்சி கிழக்கில் போட்டியிடும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி போட்டு கொண்டு தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரித்து வரும் நிலையில், திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய் மீண்டும் பிரசாரம் செய்ய வருவாரா? என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடம் ஏற்பட்டது. இந்தநிலையில், விஜய் நாளை (19-04-2026) மாலை திருச்சியில் […] - [கோவையில் இன்று (ஏப்.18) பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டி பிரச்சாரம்...!](https://rockforttimes.in/prime-minister-modi-and-chief-minister-m-k-stalins-campaign-in-coimbatore-today-april-18/): பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதையொட்டி, 2500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இன்று (ஏப்.18) மாலை 5 மணியளவில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார். இதற்காக பிரம்மாண்ட மேடையும், சுமார் 5 லட்சம் பேர் அமரும் வகையிலான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒருபக்கம் பிரதமர் இன்று கோயம்புத்தூரில் பிரசாரம் செய்யும் நிலையில், மறுபுறம் இரவு 7 மணி அளவில் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர், குன்னூர், கவுண்டம்பாளையம் , தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களை முன்னிறுத்தி இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் […] - [வால்பாறையில் வேன் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழப்பு...!](https://rockforttimes.in/10-people-died-in-a-van-accident-in-valparai-after-it-overturned/): கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கு ஒரு வேன் சென்று கொண்டிருந்தது. அந்த வேன் வால்பாறை மலைச்சாலையில் 13-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த அந்த வேனில் 16 பேர் பயணம் செய்ததாகவும், அவர்களில் 10 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த தகவலின்பேரில் போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. - [துறையூரில் நாளை(ஏப்.18) ராகுல் காந்தி பிரச்சாரம்; இடத்தை பார்வையிட்டார், அமைச்சர் கே.என்.நேரு...!](https://rockforttimes.in/rahul-gandhis-campaign-in-thuraiyur-tomorrow-april-18-minister-k-n-nehru-visited-the-place/): தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ராகுல் காந்தி எம்பி தமிழகம் வந்து காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்னும் பிரச்சாரம் செய்யவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதால் அவரால் வர இயலவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராகுல் காந்தி எம்பி நாளை(ஏப்.18) தமிழகம் வருகிறார். அப்போது அவர் திருச்சி மாவட்டம், துறையூர்(தனி) தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத்தை ஆதரித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. ஹெலிகாப்டர் மூலம் அவர் துறையூர் வருவதாக தெரிகிறது. இதற்காக துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் ஹெலிபேட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் பயணம் செய்து துறையூர்- பெரம்பலூர் பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள திடலில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக பந்தல் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. […] - [தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம்...* மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்...!](https://rockforttimes.in/we-will-not-allow-the-constituency-delimitation-bill-to-be-passed-said-rahul-gandhi-angrily-in-the-lok-sabha/): தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஓரிரு நாட்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதாவை மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்துள்ளது. மசோதாவின் மீது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் உரையாற்றிய நிலையில், மசோதா மீது மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவையில் இன்று( ஏப்.17) உரையாற்றினார். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா உண்மையில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும்படி இல்லை. 2023-ல் கொண்டு வரப்பட்ட அதே இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டு வந்துவிட்டு அதனை நிறைவேற்ற நாங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோருகிறது. தமக்கான செல்வாக்கு குறைந்து வருவதை கண்டு பயம் கொண்டுள்ள பாஜக, மத்திய ஆட்சியில் தமக்குள்ள […] - [வாக்குச்சாவடி மையங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு...!](https://rockforttimes.in/trichy-district-collector-personally-inspects-polling-stations/): தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. மே 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் வாக்குச்சாவடி மையங்களில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரே இடத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாக்காளர்களுக்கு செய்யப்பட்டு வரும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாநகர காவல் ஆணையர் காமினி ஆகியோர் உடன் இருந்தனர். - [பிரதமர் மோடி நாளை (ஏப்.18) கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்...!](https://rockforttimes.in/prime-minister-modi-to-visit-coimbatore-tomorrow-april-18-security-arrangements-intensified/): பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக நாளை(18-04-2026) தமிழகம் வருகிறார். கோவையில் உள்ள கொடிசியா மைதானம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று, கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள், முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு இருக்கைகள், குடிநீர், கழிப்பறை, வாகன நிறுத்தும் வசதி போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் வருகையையொட்டி கோவையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், மத்திய பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். நகரின் முக்கிய இடங்கள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் சோதனைகள் கடுமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நகரின் பல பகுதிகள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கைகள் […] - [செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரின் வீடு, அலுவலகங்களில் 'ஐடி' ரெய்டு...!](https://rockforttimes.in/it-raids-on-senthil-balajis-close-friends-house-and-offices/): தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சரும், கரூர் திமுக மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜியின் மிக நெருங்கிய நண்பரும், ஒப்பந்ததாரருமான எம்.சி. சங்கர் ஆனந்த் என்பவரின் இரு அலுவலகங்கள், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று (17.04.2026) காலை 11 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் செந்தில் பாலாஜியின் மற்ற இரு நண்பர்களுக்குச் சொந்தமான உணவகத்திலும் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.  அதாவது கரூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டு அடிப்படையில் செந்தில் பாலாஜியின் நண்பர்களுக்குத் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் […] - [தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக சீமான் மீது வழக்குப்பதிவு...!](https://rockforttimes.in/case-registered-against-seeman-for-violating-election-code-of-conduct/): தஞ்சை, பனகல் கட்டிடம் எதிரே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நேற்ற (ஏப்.16) இரவு நடந்தது. கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார். தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, இரவு 10 மணி வரை தான் ஒலிபெருக்கியில் பிரசாரம் செய்ய வேண்டும். ஆனால், இந்த கூட்டத்தில் இரவு 9.30 மணியளவில் பேச தொடங்கிய சீமான் 10 மணியை கடந்து பேசினார். அதற்கு சில நிமிடங்களுக்கு முன்பே சீமானை நோக்கி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் கைக்கடிகாரத்தை காண்பித்து நேரமாகிவிட்டது என முன்னெச்சரிக்கை செய்தார். தொடர்ந்து 10 மணி கடந்த பின்னரும் பேசிய சீமானிடம் எச்சரித்தார். ஆனால், அவர் வழக்கு வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி தொடர்ந்து 10-10 மணி வரை பேசினார். இந்த நிலையில் சீமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீது தஞ்சை போலீசார் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக […] - [கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வாலிபர்களிடம் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு...! * தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை !](https://rockforttimes.in/youths-on-a-trip-to-kodaikanal-have-guns-causing-a-stir-election-flying-squad-conducts-intensive-investigation/): தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம், நகை மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. முதலமைச்சர், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாகனங்களும் சோதனையிடப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் கொடைக்கானலின் முகப்பு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் பகுதியில் இருந்து 4 வாலிபர்கள் வந்த ஜீப்பை சோதனை செய்தபோது துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. உடனே அந்த 4 வாலிபர்களும் வேகமாக ஜீப்பை எடுத்து தப்பி சென்றனர். உடனே, தேர்தல் பறக்கும் படையினர் கொடைக்கானல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, ஜீப்பை பின்தொடர்ந்தனர். சுமார் 3 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து சென்று அவர்களை மடக்கினர். பின்னர் அந்த துப்பாக்கி மற்றும் ஜீப்பை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், 4 வாலிபர்களிடமும் தீவிர […] - [ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து மணப்பாறையில் அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்...!](https://rockforttimes.in/minister-k-n-nehru-campaigned-in-manapparai-in-support-of-the-dmk-candidate-for-the-srirangam-assembly-constituency/): திருச்சி மாவட்டம், ஶ்ரீரங்கம் சட்டமன்ற திமுக வேட்பாளர் துரைராஜை ஆதரித்து தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மணப்பாறை அருகே உள்ள வடக்குசேர்பட்டி கிராமத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் இங்குள்ள சிப்காட் தொழிற்சாலைக்கு பல்வேறு தொழிற்சாலைகளை கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமான ஜாபில் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.மிகவிரைவில் அந்த தொழிற்சாலை இங்கு அமைய உள்ளது. அதன்மூலம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 5000க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். முதலமைச்சர் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். தேர்தல் முடிந்தவுடன் அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றி தருவார். தற்போது இங்கு களத்தில் உள்ள வேட்பாளர் துரைராஜ் மக்கள் பிரதிநிதியாக இருந்தவர். மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். இந்த பகுதியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார் எனக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சருடன் மணப்பாறை கிழக்கு […] - [எங்களின் எதிர்ப்பை மீறி தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை நிறைவேற்றினால் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்...* முதல்வர் மு.க.ஸ்டாலின்.!](https://rockforttimes.in/if-the-constituency-delimitation-amendment-is-passed-despite-our-opposition-the-consequences-will-have-to-be-faced-said-chief-minister-m-k-stalin/): தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு மொத்தமாகத் திரும்பப் பெற வேண்டும். நம்முடைய கடும் எதிர்ப்பினையும் போராட்டத்தினையும் தொடர்ந்து, தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டின் தொகுதி அளவு குறையாது என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோர் நாடாளுமன்றத்தில் வாய்மொழி உத்தரவாதம் அளித்துள்ளனர். ஆனால், சொல் ஒன்று – செயல் வேறு என்பதாக, இவர்கள் தாக்கல் செய்துள்ள சட்ட முன்வடிவு முழுக்க முழுக்க ஏமாற்றுத் திட்டமாக இருக்கிறது. இதை நம்பவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் முடியாது எனத் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்தச் சட்ட முன்வடிவில் தொகுதி மறுசீரமைப்பு ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மூலம், இவர்கள் நினைத்தால் நினைத்த நேரத்தில், நினைத்த முறையில், எப்போது வேண்டுமானாலும் எதிர்காலத்தில், இவர்களுக்குச் சாதகமான வகையில், இந்திய மாநிலங்களின் தொகுதியளவை […] - [பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் என் வீடு- மாதத்துக்கு ஒரு முறை வருவேன்...* விஜய்...!](https://rockforttimes.in/perambur-trichy-east-constituencies-are-my-home-i-come-once-a-month-vijay/): தமிழக வெற்றிக்கழக தோ்தல் அறிக்கையை வெளியிட்டு விஜய் பேசியதாவது:- எனது தொகுதிக்கு நான்தான் பிரதிநிதி, உறுதியாக நாம்தான் ஆட்சிக்கு வருவோம். இந்த விஜயை நீங்கள் 100 சதவீதம் நம்பலாம். ஊழல் இல்லாத ஆட்சி நடத்தப்படும். பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நான் உங்களை ஏமாற்ற மாட்டேன். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொடமாட்டேன். நமது வேட்பாளர்களும் நானும் வேறுவேறு இல்லை. நமது வேட்பாளர் ஜெயித்தார் என்றால் நாம் ஒவ்வொருவரும் ஜெயித்தது போல. பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகள் என் வீடு, இந்த 2 தொகுதிகளும் எனக்கு ஸ்பெஷல் தான். எனது 2 தொகுதிகளுக்கும் நான் மாதந்தோறும் வருவேன், என்னை நீங்கள் மிக எளிதாக சந்திக்கலாம். தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. உங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமாக போடுங்கள். விஜய்க்கு நீங்கள் கொடுக்கும் ஒரு வாய்ப்பாக இருக்கும். உங்கள் மகனுக்கு, உங்கள் பிள்ளைக்கு, உங்கள் அண்ணனுக்கு, […] - [குதிரை வண்டியில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட திருவெறும்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார்..!](https://rockforttimes.in/thiruverumpur-constituency-aiadmk-candidate-p-kumar-went-to-collect-votes-in-a-horse-drawn-carriage/): திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ப.குமார் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில் திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட காருண்யா நகர், பொன்னேரிபுரம், கொட்டப்பட்டு, மலையடிவாரம், கல்கண்டார் கோட்டை ஆகிய பகுதிகளில் குதிரை வண்டியில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருடன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் . - [ஒரு குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான யுனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ்; 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு...* தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்!](https://rockforttimes.in/universal-health-insurance-up-to-rs-25-lakh-per-family-employment-for-5-lakh-youth-vijay-releases-election-manifesto/): வருகிற 23-ம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்கள் மாநிலம் முழுவதும் களை கட்டியுள்ளன. அனைத்துக் கட்சிகளும், தங்கள் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்ட நிலையில், முதன்முறையாக தேர்தல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை மட்டும் வெளியாகாமல் இருந்தது. இத்தகைய சூழலில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், இன்று( ஏப்.16) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் விஜய். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-  60 வயதிற்குட்பட்ட குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக மாதம் ரூ. 2,500 செலுத்தப்படும்.  ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுதோறும் 6 விலையில்லா கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.  ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் ஒரு தரமான பட்டுப்புடவை வழங்கப்படும்.  பெண்களால் நடத்தப்படும் […] - [விஜய் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடு பொடியாக்கும்...* சொல்கிறார் மு.க.அழகிரி மகள் கயல்விழி!](https://rockforttimes.in/vijays-splitting-votes-will-destroy-dmks-victory-says-m-k-azhagiris-daughter-kayalvizhi/): தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. அவர், தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது. இதுகுறித்து மு.க.அழகிரி மகள் கயல்விழி கூறுகையில், திமுகவுக்கு எதிராக நான் பேசவில்லை. கூட்டணி பலமும், பெரிய அளவிலான எதிர்ப்பற்ற தன்மையும் திமுகவை திரும்பவும் ஆட்சிக்குக் கொண்டு வருவது போல்தான் இருந்தது. ஆனால் விஜய் வந்தபிறகு நிலைமையே வேறு. களத்தில் விஜய் விளையாடுகிறார். நிச்சயம் கணிசமான வாக்குகளை அவர் பிரிப்பார். திமுக அவரை குறைத்து எடைபோடுகிறது. அவர் பிரிக்கும் வாக்குகள் திமுகவின் வெற்றியை தவிடு பொடியாக்கும். விஜய்யால் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காத தொங்கு சட்டசபை கூட அமையலாம். இந்த மாதிரியான சூழலில் அப்பாவையும், சீனியர் நிர்வாகிகளையும் அனுசரித்து, அவர்களுடைய அனுபவத்தைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் […] - [“உண்மையானவராக, நேர்மையானவராக இருந்தால் கரூரில் நிற்க வேண்டியதுதானே?”* செந்தில் பாலாஜிக்கு இ.பி.எஸ்.கேள்வி!](https://rockforttimes.in/if-you-are-honest-and-sincere-you-should-stand-in-karur-right-eps-question-for-senthil-balaji/): தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குகள் சேகரித்து வருகிறார். அந்த வகையில் கோவையில் இன்று (16.04.2026) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “செந்தில் பாலாஜி உண்மையானவராக, நேர்மையானவராக இருந்தால் கரூரில் நிற்க வேண்டியதுதானே?. நான் எடப்பாடியில் நிற்கிறேன். வேலுமணி தொண்டாமுத்தூரில் நிற்கிறார். அவரவர் தொகுதியில் நிற்கிறார்கள். நீங்கள் ஏன் தொகுதி மாதிரி வந்து நிற்கிறீர்கள்?. அங்கே மக்கள் நிராகரித்து விட்டார்கள். அதனால் அங்கே வேலை இல்லை. நான் எடப்பாடியில் 11வது முறையாக நிற்கிறேன். இன்னும் என்னுடைய மக்களிடம் நான்  ஓட்டு கூட கேட்க செல்லவில்லை. நான் இன்னும் தொகுதிக்குள்ளேயே போகவில்லை. அப்படி தொகுதிக்குள்ளேயே போகாமல் கூட என்னுடைய மக்கள் என்னை நேசிக்கிறார்கள். குடும்பத்தில் ஒருவராக என்னை பார்க்கின்றனர். மக்களோடு மக்களாக வாழ்ந்து […] - [தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாக்கள் மக்களவையில் தாக்கல்...!](https://rockforttimes.in/delimitation-and-womens-reservation-bills-introduced-in-the-lok-sabha/): நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் இன்று (ஏப்.16) காலை 11 மணிக்குக் கூடியது. சபாநாயகர் ஓம் பிர்லா அவையை வழிநடத்தினார். அவை கூடியதும் சட்ட அமைச்சர், மசோதாக்களை அவையில் முன்மொழிய அனுமதி கோரினார். அதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை, மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாக்களை மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். தொடர்ந்து மசோதாவை அறிமுகம் செய்ய அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதா அறிமுகத்துக்கு ஆதரவாக 207 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 126 எம்பிக்கள் வாக்களித்தனர். இதன்மூலம், மசோதாவை அறிமுகம் செய்வதற்கு அதிக ஆதரவு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த மசோதாக்கள் மீது பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார். - [வாக்காளர் அடையாள அட்டை ரொம்ப பழையதாக இருக்கிறதா? * புதிய கார்டு பெறுவது ரொம்ப 'ஈஸி'...!](https://rockforttimes.in/is-your-voter-id-card-too-old-getting-a-new-card-is-very-easy/): தமிழகத்தில் வருகிற 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறது. வாக்குப்பதிவு தொடர்பாக வாக்காளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களையும், விழிப்புணர்வுகளையும் தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. அந்தவகையில் வாக்காளர் அடையாள அட்டை பழையதாகவும், மோசமாகவும் இருந்தால் புதிய வாக்காளர் அட்டையை மாற்றிக்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இ- வாக்காளர் அட்டையை எளிதாக ஆன்லைனிலையே டவுன்லோடு செய்யலாம். இதற்கு வாக்காளர்கள், voters.eci.gov.in/login என்ற இணையதளம் சென்று VOTER ID எண்ணை உள்ளீடு செய்யவேண்டும். பின் மொபைலுக்கு வரும் ஓடிபி-ஐ பதிவிட்டால் புதிய டிஜிட்டல் கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் ஆதார், பான் கார்டு, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்குப்பதிவு செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. - [தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: கருப்புச்சட்டை அணிந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் கே.என்.நேரு...!](https://rockforttimes.in/opposition-to-the-delimitation-amendment-bill-minister-k-n-nehru-participated-in-the-campaign-wearing-a-black-shirt/): திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேரு இன்று( ஏப்.16) காலை 62 -வது வார்டு பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ராமச்சந்திர நகர், பஞ்சப்பூர், செங்குறிச்சி, செட்டியபட்டி ஆகிய பகுதி மக்களிடம் நடந்து சென்றும், திறந்த வேனில் நின்ற படியும் வாக்கு சேகரித்தார். அப்போது ஏராளமான பெண்கள் அமைச்சருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது அவர், கீழபஞ்சப்பூர் பகுதி மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கடந்த ஐந்தாண்டுகளில் செய்துள்ளோம். கிராமப்புற பகுதியாக இருந்த கீழபஞ்சப்பூர் தற்போது மாநகரப் பகுதிக்குள் வந்துவிட்டது. அருகே பேருந்து நிலையம் வந்துள்ளது. திமுக, மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்பு இந்த மக்களுக்கு இன்னும் ஏராளமான நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அமைச்சருடன் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் மற்றும் கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று வாக்கு சேகரித்தனர். தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று தங்களது […] - [தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!](https://rockforttimes.in/chief-minister-m-k-stalin-burned-a-copy-of-the-constituency-redelineation-bill/): நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (ஏப்.16) காலை 11 மணிக்கு கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீட்டு மசோதா, மக்களவைத் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏப்ரல் 18- ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தொடரில் மேற்கண்ட மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. இந்த மசோதாவுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆரம்பம் முதலே தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார். அந்தவகையில், இன்று தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுமாறு திமுக தலைமை அழைப்பு விடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்திற்கு தேர்தல் பிரச்சாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருப்புச்சட்டை அணிந்தவாறு கொடிக்கம்பத்தில் கருப்புக்கொடியை ஏற்றி வைத்து, மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவின் நகலை எரித்து, “போராடும் போராடும்… தமிழ்நாடு போராடும்…..வெல்வோம் ஒன்றாக….” என்று […] - [ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரிகளை வாக்காளர்களுக்கு வினியோகிக்க கூடாது:* தேர்தல் ஆணையம் கண்டிப்பு...!](https://rockforttimes.in/rs-8-thousand-coupon-samples-should-not-be-distributed-to-voters-election-commission-warns/): தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. வாக்குப்பதிவிற்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில், ஒரு சில தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கூப்பன் மாதிரி வழங்கி வருவதாக அ.தி.மு.க. குற்றஞ்சாட்டியதுடன், தேர்தல் ஆணையத்தில் அதுதொடர்பாக புகார் அளித்துள்ளது. அந்தப் புகார் மனுவில், தமிழகம் முழுவதும் பல்வேறு தொகுதிகளில் தி.மு.க.வினர் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள மாதிரி கூப்பன்களை சட்டவிரோதமாக வழங்கி வருகின்றனர். இது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமீறலாகும். தி.மு.க.வினர் தேர்தலில் குறுக்கு வழியில் வாக்குகளை பெறும் நோக்கில், தேர்தலுக்கு முன்பாகவே ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள கூப்பன்களை சீரியல் நம்பர்களுடன் வாக்காளர்களுக்கு டோக்கன்களாக வழங்கி வருவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது மட்டுமின்றி […] - [மீஞ்சூர் அருகே வீடு புகுந்து கல்லூரி மாணவியை சரமாரியாக வெட்டிய போதை கும்பல்...!](https://rockforttimes.in/near-minjur-an-intoxicated-gang-broke-into-a-house-and-brutally-attacked-a-college-student-with-repeated-hacking/): சென்னை அருகே மீஞ்சூரில் உள்ள தனது இல்லத்தில் கல்லூரி மாணவி ஒருவர் செமஸ்டர் தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தார். அப்போது இரவு அவரது வீட்டுக்குள் புகுந்த 3 பேர் கொண்ட கும்பல், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. உடனே அந்த மாணவி கூச்சலிடவே, போதையில் இருந்த 3 பேரும் மாணவியை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் மாணவியின் கை, பின்னந்தலை, கால்களில் வெட்டு விழுந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. மாணவியை வீடு புகுந்து வெட்டிவிட்டு தப்பிய கும்பலில் ஒருவனை அக்கம்பக்கத்தினர் பிடித்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பின்னர், மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து கல்லூரி மாணவி வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. - [தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை: மத்திய அரசுக்கு விஜய் கண்டனம்...!](https://rockforttimes.in/constituency-restructuring-process-vijay-condemns-the-central-government/): மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு த.வெ.க.தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543 லிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026 மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை( ஏப்.16) தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. ஆனால் ‘அரசியலமைப்பு (131வது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு வெகுவாக அதிகரிக்கும். தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக மத்திய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் […] - [கிறிஸ்தவ ஆலயத்திற்குள் கட்சி சின்னத்துடன் சென்ற இயக்குனர் சுந்தர்.சி மீது வழக்குப்பதிவு...!](https://rockforttimes.in/case-registered-against-director-sundar-c-for-entering-christian-church-with-party-symbol/): மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அதிமுக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளராக இயக்குனர் சுந்தர்.சி போட் டியிடுகின்றனர். இந்தநிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன், எல்லீஸ் நகர் பகுதி கிறிஸ்தவ ஆலயத்துக்குள், இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட சால்வையுடன் சுந்தர்.சி சென்று அங்குள்ளவர்களிடம் ஆதரவு கேட்டதுடன், பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். தேர்தல் நடத்தை விதிகளின்படி, வழிபாட்டு தலங்களுக்கு வெளியேதான் வேட்பாளர் ஆதரவு கேட்க வேண்டும். அதை இயக்குனர் சுந்தர்.சி மீறியதாக திமுக வழக்கறிஞர் சுமேஷ் புகார் அளித்தார். புகாரின் பேரில், சுந்தர்.சி மீது எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். - [தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: தமிழகம் முழுவதும் நாளை கருப்புக்கொடி போராட்டம்...!](https://rockforttimes.in/opposition-to-the-constituency-delimitation-bill-black-flag-protest-across-tamil-nadu-tomorrow/): மத்திய அரசு கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்த மசோதா, தென்மாநிலங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் வரலாற்று அநீதி. இதற்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை (ஏப்.16) நடக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், மத்திய பாஜக அரசு நாளை நாடாளுமன்றத்தில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தம் தமிழ்நாட்டுக்கும், தென் மாநிலங்களுக்கும் இழைக்கப்படும் “மாபெரும் வரலாற்று அநீதி. விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென்னிந்தியர் ஒவ்வொருவரும் கொதித்துப் போயிருக்கிறோம். நெருப்போடு விளையாடுகிறது பாஜக. தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும். தமிழ்நாட்டின் குரலை மதித்து மத்திய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க […] - [தொகுதி மறுவரையறை: திமுக எம்.பி.க்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை...!](https://rockforttimes.in/constituency-redelineation-chief-minister-m-k-stalin-holds-urgent-meeting-with-dmk-mps/): அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026 தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு முன் மொழிந்து உள்ளது. இந்த மசோதாக்கள் நாளை (16-04-2026) கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையொட்டி நேற்று இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து உள்ளனர். இந்தநிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று( ஏப்.15) காலை 11 மணிக்கு திமுக எம்.பி.க்கள் அவசரக் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார். […] - [மீன்பிடி தடைக்காலம் இன்று( ஏப்.15) முதல் அமல்; மீன்கள் விலை உயர வாய்ப்பு?](https://rockforttimes.in/fishing-ban-begins-today-april-15-fish-prices-likely-to-rise/): தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், இன்று அதிகாலை முதல் தமிழ்நாடு, புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. அதன்படி, 61 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாது. இந்த தடை அமலுக்கு வந்துள்ளதை ஒட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சென்னை காசிமேடு, துறைமுகம், கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 20,000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இதுவரை கடலில் இருந்த விசைப்படகுகள் அனைத்தும் அதிகாலையிலேயே கரைக்கு திரும்பின. இந்த தடை என்பது நடுக்கடலில் சென்று ஆழமான பகுதிகளில் மீன்பிடிக்கும் விசைப்படகுகளுக்கு மட்டுமே பொருந்தும். சிறிய ரக ஃபைபர் படகுகள், கட்டுமரம் மூலமாக கடலோரங்களில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொள்ளலாம். இந்த தடைக்காலத்தின் போது மாநில […] - [நாகர்கோவிலில் இன்று(ஏப்.15) பிரதமர் நரேந்திர மோடி 'ரோடு ஷோ'...* சென்னையில் விஜய் பிரச்சாரம்...!](https://rockforttimes.in/prime-minister-narendra-modis-road-show-in-nagercoil-today-apr-15-vijay-campaign-in-chennai/): தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, இன்றைய தினம் நாகர்கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். ஏப்ரல் 21 மாலையுடன் தேர்தல் பரப்புரையை முடிக்க வேண்டும் என்பதால், பல கட்சித் தலைவர்களும், அக்கட்சிகளில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களும் தமிழ்நாடு முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று(15-04-2026) பிரதமர் நரேந்திர மோடி, அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து நாகர்கோவிலில் பிற்பகல் 3 மணிக்கு ‘ரோடு ஷோ’ நடத்துகிறார். சென்னை, தியாகராய நகர் தொகுதி, ஆயிரம் விளக்கு தொகுதி மற்றும் எழும்பூர் (தனி) தொகுதி ஆகிய பகுதிகளில் மாலை 4 மணி முதல் வாகனத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். - [என்னை 100% நம்பலாம்; பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்ற மாட்டேன்...* திருப்பூரில் விஜய் ஆணித்தரமான பேச்சு!](https://rockforttimes.in/you-can-trust-me-100-i-will-not-deceive-you-with-false-promises-vijay-said-firmly-in-tiruppur/): தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு வருகிற 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் இன்று(14-04-2026) திருப்பூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் சில தேர்தல் வாக்குறுதிகளை அளித்தார். அதன் விவரம் வருமாறு:- நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்க அரசு சார்பில் இ காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும். நிலையற்ற நூல் விலை, மின்சார நெருக்கடியை பகிர்ந்துகொள்ள, கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ30 ஆயிரம் வழங்கப்படும். கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 500 யூனிட்டாகவும், விசைத்தறிகளுக்கு 1,500 யூனிட்டாகவும் வழங்கப்படும். நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைக்க நூல், சாயங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு செய்யப்படும். நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்படும். சிறு, குறு, நடுத்தர […] - [திருச்சி வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் மாற்றம்...!](https://rockforttimes.in/changes-in-the-services-of-express-trains-passing-through-tiruchirappalli/): திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ரெயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16848) வருகிற 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரையிலும், மும்பை சி.எஸ்.டி.எம். எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16352) வருகிற 16 மற்றும் 19-ந் தேதிகளிலும், கன்னியாகுமரி ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 12666) வருகிற 18-ந்தேதியிலும், கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 17070) வருகிற 17-ந்தேதியிலும் மதுரை, மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல, குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்:16128) வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையும், எர்ணாகுளம்- வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16363) வருகிற 15-ந்தேதியிலும் மதுரை சந்திப்பை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி வந்து செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. […] - [திருப்பூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க.கூட்டத்தில் வேட்பாளர் உட்பட 9 பேர் மயக்கம்...!](https://rockforttimes.in/in-tiruppur-at-a-tvk-meeting-attended-by-vijay-9-people-including-a-candidate-fainted/): திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு. அவினாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் த.வெ.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் இன்று(ஏப்ரல் 14 )மாலை திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் கோவைக்கு வந்த விஜய், பின்னர் அங்கிருந்து கார் மூலம் அவினாசி சென்றார். அதன்பிறகு பிற்பகல் 3 மணியளவில் ஆட்டையாம்பாளையம் பிரிவில் இருந்து பிரசார வாகனத்தில் சென்று அவினாசி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோடு ஷோ சென்று வேனில் நின்றபடி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமாநல்லூர் நால்ரோடு சென்று அங்கு பிரச்சாரம் செய்தார். இதைத்தொடர்ந்து பூலுவப்பட்டி வரை ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார். இந்தநிலையில், விஜய்யின் வருகைக்காக பெருமாநல்லூரில் காத்திருந்த த.வெ.க. வேட்பாளருக்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு […] - [தமிழ்நாட்டை பாதிக்கும்படி தொகுதி வரையறை இருந்தால் சும்மா இருக்க மாட்டோம்...* மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!](https://rockforttimes.in/we-will-not-remain-idle-if-the-constituency-delimitation-affects-tamil-nadu-chief-minister-m-k-stalins-warning-to-the-central-government/): தமிழ்நாட்டை பாதிக்கும்படியோ, வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை கூட்டும்படியோ தொகுதி வரையறை நடந்தால் சும்மா இருக்க மாட்டோம். என முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்தது அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “தேர்தல் பிரசாரத்துக்காக, நிற்காமல் ஓடிக் கொண்டே இருந்தாலும், இந்தக் கடமையை தவிர்க்க முடியாது. நாளை மறுநாள் ஏப்ரல் 16, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூடுகிறது. கூடுகிறது என்று சொல்வதைவிட, தமிழ்நாடு – மேற்கு வங்கத் தேர்தலுக்கு இடையில் வலுக்கட்டாயமாகக் கூட்டப்படுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் சட்டத் திருத்தத்தை இந்தத் தொடரில் ‘புல்-டோஸ்’ செய்யப் போகிறார்கள். முதலில் இருந்தே இது பற்றி நாம் தொடர்ந்து எச்சரித்தோம். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் இருந்து, இதனால் பாதிப்படையவுள்ள மாநில முதலமைச்சர்களையும் – முக்கியக் கட்சித் தலைவர்களையும் சென்னைக்கு அழைத்து, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் நடத்தினோம். மக்கள் தொகையைக் […] - [ஒருமுறை மட்டும் ரூ.10,000: மகளிர்க்கு மாதந்தோறும் ரூ.2000...* பாஜக தேர்தல் அறிக்கையிலும் தாராளம்!](https://rockforttimes.in/rs-10000-only-once-rs-2000-monthly-for-women-bjps-election-manifesto-is-also-generous/): தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏற்கனவே, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல, சென்னை பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா இன்று( ஏப்.14) காலை வெளியிட்டார். இந்த நிகழ்வில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர்கள் தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- * தேர்தலில் வெற்றி பெற்றவுடன் குடும்பத்துக்கு தலா ரூ.10,000 வழங்கப்படும். * மகளிர்க்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். * பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி பண்டிகைக்கு தலா ஒரு சிலிண்டர் வீதம் மொத்தம் 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். பெண்கள் இரு சக்கர மின் வாகனம் வாங்க ரூ. 25,000 மானியம் வழங்கப்படும். * தைப்பூசம் […] - [தேர்தல் அப்டேட்களை உடனுக்குடன் செயலியில் பதிவு செய்ய தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி...!](https://rockforttimes.in/election-officials-trained-to-instantly-record-election-updates-on-the-app/): தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்​குப்பதிவு வருகிற 23-ம் தேதி நடை​பெற உள்​ளது. இதற்​கான ஆயத்​தப் பணி​களில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு முக்​கிய மைல்​கல்​லாக, புரோ மாட்யூல் (PRO Module-ECINET) என்ற செயலி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலி குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு சென்​னை​யில் பயிற்சி அளிக்கப்பட்டது. இசிஐ நெட் புரோ மாட்​யூல் என்​பது தேர்​தல் பணி​யில் ஈடுபடும் தலைமை வாக்​குச்​சாவடி அலு​வலருக்​காக உரு​வாக்​கப்​பட்ட ஒரு செயலி​யாகும். வாக்​குச்​சாவடி அலுவலர்​கள் மற்​றும் வாக்​குச்​சாவடி பொருட்​கள் வரு​கை, மாதிரி வாக்​குப்​ப​திவு, வாக்​குப்​ப​திவு தொடக்​கம், அந்​தந்த நேரப்​படி வாக்​குப்​ப​திவு சதவீதம் அப்​டேட், வாக்​குப்​ப​திவு நிறைவு போன்ற அப்​டேட்​களை அதி​காரி​கள் கைபேசி செயலி மூலம் நேரடி​யாக பதிவு செய்ய இந்த புரோ மாட்​யூல் பயன்படுத்தப்படுகிறது. இந்த பயிற்​சி​யில் அனைத்து தொகு​தி​களின் தேர்​தல் நடத்​தும் அலுவலர்​கள் மற்​றும் தொடர்​புடைய பிற அதி​காரி​கள் கலந்து கொண்​டனர். இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் மூத்த அதி​காரி​கள், சந்​தோஷ் […] - [வாக்குப்பதிவு செய்ய சொந்த ஊர் போறீங்களா? 21, 22-ந் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் ரெடி..!](https://rockforttimes.in/are-you-going-to-your-hometown-to-vote-special-buses-are-ready-on-the-21st-and-22nd/): தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 23ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் விஜய் கட்சி முதல் முறையாக களம் காண்பதால் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடையே மாபெரும் எழுச்சி காணப்படுகிறது. அவர்கள் பல்வேறு ஊர்களில் பணியாற்றி வருகிறார்கள். அதேபோல, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர் சென்று தங்களது வாக்கை பதிவு செய்ய வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது. இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் கூறியதாவது:- பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் வருகிற 21, 22 மற்றும் 23-ந்தேதி மதியம் […] - [ஓம் சக்தி... பராசக்தி...கோஷம் விண்ணதிர சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்...!](https://rockforttimes.in/om-shakti-parashakti-the-chithirai-chariot-festival-at-samayapuram-mariamman-temple-is-celebrated-grandly/): பிரசித்தி பெற்ற அம்மன் ஸ்தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா பிரசித்தி பெற்றது. அதேபோல, இந்த ஆண்டுக்கான தேர்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்வாக இன்று (ஏப்ரல் 14) காலை தேரோட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருகை தந்து தேரோட்டத்தில் பங்கேற்றுள்ளனர். காலை 10-30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஓம் சக்தி…பராசக்தி… கோஷம் விண்ணதிர தேரை வடம் பிடித்தனர். தேர், முக்கிய வீதிகள் வழியாக அசைந்தாடி சென்று வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், காவடி, பால்குடம், தொட்டில் காவடி எடுத்தும் கோவிலை வந்தடைந்து அம்மனை பயபக்தியுடன் தரிசித்து வருகின்றனர். சமயபுரத்தில் பக்தர்கள் குவிந்துள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு மாவட்ட […] - [திருச்சியில் தேர்தல் பிரச்சாரம்: திமுக அரசை குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி..!](https://rockforttimes.in/election-campaign-in-trichy-edappadi-palaniswami-accuses-dmk-government/): திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஏப்.13) தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக ஆட்சி இருந்தபோதே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியது என தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொருளாதார வளர்ச்சி குறித்து பொய்யான தகவல்களை கூறுவதாக குற்றம்சாட்டினார். திமுக அரசு பக்கம் பக்கமாக விளம்பரங்கள் செய்து மக்களை தவறாக வழிநடத்துகிறது என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில்தான் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டதால் தற்போது இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், விவசாயத் துறை திமுக ஆட்சியில் 5.5% லிருந்து 3.5% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொழிற்சாலைகள் குறித்த கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்காமல் வெள்ளைத் தாளை காட்டுவதாகவும், திமுக அரசு எந்த சாதனையும் செய்யவில்லை என்றும் அவர் விமர்சித்தார். திருச்சியை அதிமுக கோட்டையாக மாற்ற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி […] - [தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!](https://rockforttimes.in/severe-road-accident-on-national-highway-4-died-on-the-spot/): தூத்துக்குடி, எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சென்னை கொளத்தூரை சேர்ந்த பாஸ்கரன்–வனிதா தம்பதியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 6 பேர் இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். கோவிலில் தரிசனம் முடித்து விட்டு இன்று (ஏப்.13) மதியம் அவர்கள் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எட்டயபுரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி, வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த சந்தியா மற்றும் பிரதீப் குமார் ஆகிய இரண்டு குழந்தைகளும் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளரும் சம்பவ இடத்தில் ஆய்வு […] - [அமைச்சர் சேகர்பாபுவின் மகன்களுக்கு சொந்தமான நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை..!](https://rockforttimes.in/income-tax-department-raids-company-owned-by-minister-shekar-babus-sons/): தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றன என்ற புகார்களின் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் முக்கிய அரசியல் தொடர்புடைய நபர்களின் இடங்களிலும் இன்று(ஏப்.13) சோதனை நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக அமைச்சரும் துறைமுகம் தொகுதி வேட்பாளருமான சேகர்பாபுவின் மகன்கள் நடத்தும் தனியார் நிறுவனத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா நடைபெறுவதாக வருமான வரித்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து சென்னையில் மொத்தம் 5 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த அறநிலையத்துறை அமைச்சரான சேகர்பாபுவின் மகன்கள் விக்னேஷ் மற்றும் ஜெயசிம்மன் ஆகியோர் மயிலாப்பூரில் சிவசாமி சாலையில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இன்று(திங்கள்கிழமை) காலை சுமார் 10 மணியளவில் திடீரென அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் […] - [தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!](https://rockforttimes.in/tasmac-shops-to-be-closed-for-3-days-in-tamil-nadu-election-commission-announces-action/): TASMAC shops to be closed for 3 days in Tamil Nadu: Election Commission announces action..! - [திருச்சியில் தேர்தல் பணிகள் தீவிரம்: த.வெ.க செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா பேட்டி..!](https://rockforttimes.in/election-work-intensifies-in-trichy-aadhav-arjuna-speaks-at-meeting/): தமிழக வெற்றிக் கழகம் சார்பில் திருச்சி கிழக்கு தொகுதியில் தலைவர் விஜய் போட்டியிட உள்ள நிலையில், அங்கு கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக திருச்சி, தஞ்சை மார்க்கெட் சாலையில் உள்ள கிழக்கு தொகுதி அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் இன்று(ஏப்.13) நடைபெற்றது. இதில் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, டெல்டா மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரச்சாரங்களை பொதுமக்கள் புறக்கணித்து வருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரு தலைவர்களும் தங்கள் பிரச்சாரங்களில் அரசியல் தலைவர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசுவதாக குற்றம்சாட்டினார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரச்சாரம் “குடும்ப அலை” ஆக மாறியுள்ளது என்றும், மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் மக்கள் ஆதரவு கிடைத்ததாகவும் கூறினார். […] - [சேலம், ஓமலூர் அருகே பரபரப்பு: அரசு பள்ளி ஆசிரியை படுகொலை..!](https://rockforttimes.in/salem-near-omalur-government-school-teacher-murdered-in-shocking-incident/): சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஸ்ரீவித்யா (38) படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைச் சம்பவத்துக்குப் பிறகு தப்பிச் சென்ற அவரது கணவர்  தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க ஓமலூர் போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், தம்பதியிடையே நீண்ட நாட்களாக குடும்பத் தகராறு இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக ஸ்ரீவித்யா தனது தாய் வீட்டில் தங்கி பணியாற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையில் வேறு தூண்டுதல்கள் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ் குமார் தலைமையிலான போலீசார் பள்ளி வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவ நேரத்தில் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குமூலமும் பெறப்பட்டு வருகிறது. ஸ்ரீவித்யாவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மெடிக்கல் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பள்ளிக்கு […] - [“புலி” பட வருமான விவகாரம்: உயர் நீதிமன்றத்தை நாடினார் விஜய்!](https://rockforttimes.in/puli-film-revenue-issue-vijay-approaches-the-high-court/): கடந்த 2015-16 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டுக்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, “புலி” படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் தெரிவிக்கவில்லை என கண்டறிந்தது. வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இறுதி விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில், சட்டப்படி அபராத உத்தரவு 2019 ஜூன் […] - [உரிமம் இல்லாத பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு..!](https://rockforttimes.in/terrible-explosion-at-unlicensed-firecracker-factory-one-dead/): சாத்தூர் பட்டாசு ஆலையில் இன்று(ஏப்.13) ஏற்பட்ட வெடி விபத்தில், நிகழ்விடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 3 தொழிலாளர்கள் காயமடைந்தனர். சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 20-க்கும் மேற்பட்ட அறைகள் கொண்ட இந்த ஆலையில் 60 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். இன்று வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென தீப்பற்றி வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் கிலோகணக்கில் இருந்த பட்டாசுகள் வெடித்து சிதறின. தொடர்ந்து பலமுறை வெடிப்பு ஏற்பட்டதால் பெரும் சத்தமும் புகையும் உருவாகி, சுமார் 6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு உணரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் காயமடைந்த ராஜ்குமார் (42), செல்வம் (33), ரமேஷ் (42) ஆகிய மூவரையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். […] - [நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!](https://rockforttimes.in/bomb-threat-to-actress-trishas-house/): ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட பிரபல நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், நடிகை திரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை அடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை திரிஷாவின் வீட்டில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. - [“கடிதத்தில் இல்லாத எதையும் நான் பேசவில்லை...”- நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி!](https://rockforttimes.in/i-did-not-say-anything-that-was-not-in-the-letter-chief-minister-m-k-stalins-response-to-nirmala-sitharaman/): “I did not say anything that was not in the letter...”- Chief Minister M.K. Stalin's response to Nirmala Sitharaman! - [தேர்தல் பரப்புரையின் போது திடீரென மயக்கம்: ராமதாஸிடம் நலம் விசாரித்தார், முதல்வர் மு.க.ஸ்டாலின்...!](https://rockforttimes.in/suddenly-fainted-during-election-campaign-chief-minister-m-k-stalin-inquired-about-ramadosss-well-being/): சேலம் மாவட்டம், பள்ளப்பட்டி பகுதியில் சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அருளை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று (ஏப்.12) பரப்புரை மேற்கொண்டார். அப்போது ராமதாஸ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் முதலுதவி சிகிச்சை அளித்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதிகப்படியாக வெயிலின் தாக்கம் காரணமாக ராமதாஸ் மயங்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸிடம், தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ராமதாஸ் நலமுடன் உள்ளார். 2 நாட்கள் ஓய்வுக்கு பின்பு மீண்டும் பரப்புரைக்கு போகலாம் என்று தெரிவித்துள்ளனர். - [திருச்சி, புதுக்கோட்டையில் நாளை நடைபெற இருந்த விஜய் 'ரோடு ஷோ' ரத்து...!](https://rockforttimes.in/vijays-road-show-scheduled-to-be-held-in-trichy-and-pudukkottai-tomorrow-has-been-cancelled/): தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பிரசாரம் செய்வதற்காக விஜய் சென்னையில் இருந்து நாளை(ஏப்.14) தனி விமானம் மூலம் காலை 11 மணி அளவில் திருச்சிக்கு வருவார் என்றும், விமான நிலையத்தில் இருந்து மொராய்ஸ் சிட்டி வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு ‘ரோடு ஷோ’ நடத்தி தொண்டர்களையும், மக்களையும் சந்திப்பார் என்றும், மொராய்ஸ் சிட்டி வளாகத்தில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பார் என்றும் த.வெ.க. நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும், நாளை விஜய் தர்மபுரி மாவட்டத்திற்கு செல்வதால் வேறு தேதியில் திருச்சியில் பிரசாரம் செய்ய அவர் வருவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து நாளை விஜய் பிரசாரம் […] - [திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்...!](https://rockforttimes.in/change-in-trichy-karaikal-train-service-2/): திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி, திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண்: 76820) இன்று (ஏப்ரல் 13) முதல் 18-ந்தேதி வரை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது, திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக காரைக்கால்- திருச்சி டெமு ரெயில் (வண்டி எண்: 76819) மேற்கண்ட தேதிகளில் காரைக்கால்- திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார். - [பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமானார்...! ](https://rockforttimes.in/famous-singer-asha-bhosle-passed-away/): தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே தனது 92-வது வயதில் காலமானார். நேற்று (ஏப்ரல் 11) ஏற்பட்ட மாரடைப்பைத் தொடர்ந்து, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். தமிழில் ஓ பட்டர் ப்ஃளை, நீ பார்த்த பார்வைக்கு ஒரு நன்றி, செண்பகமே செண்பகமே… போன்ற பல பாடல்களைப் பாடியுள்ளார். - [திருச்சி 'ராக்போர்ட் டைம்ஸ்' செய்தி எதிரொலி: பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூர்மையான ஆயுதத்துடன் பைக்கில் பவனி வந்த வாலிபர் கைது...! (வீடியோ இணைப்பு)  ](https://rockforttimes.in/trichy-rockfort-times-news-a-young-man-was-arrested-for-riding-a-bike-with-a-sharp-weapon-to-threaten-the-public/): திருச்சி மாநகர பகுதியில் உள்ள முக்கியமான சாலைகளுள் ஒன்று கல்லுக்குழி குட்ஷெட் மேம்பாலம். இந்த பாலத்தின் வழியாக புதுக்கோட்டை, கீரனூர், விமான நிலையம், டிவிஎஸ் டோல்கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் ஏப்ரல் 10-ம் தேதி மதியம் சுமார் 12 மணியளவில்  டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து போஸ்ட் ஆபிஸ் சிக்னல் செல்லும் சாலையில், இரண்டு இளைஞர்கள் பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது பின்னால் அமர்ந்திருந்த ஒரு வாலிபர், கையில் வைத்திருந்த கூர்மையான  ஆயுதத்துடன் சாலையை கிழித்தபடி  சென்றார். இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனை அவர்களுக்கு பின்னால் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட இதற்கான வீடியோ ‘திருச்சி ராக்போர்ட் டைம்ஸ்’ தமிழ் வார இதழ் சோசியல் மீடியாவில் வெளியானது. இந்த வீடியோவை பார்த்த காவல்துறை அதிகாரிகள், இது தொடர்பாக உடனடியாக […] - [முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மகன் ஜவஹர்லால் நேருவுக்கு அதிமுகவில் பதவி...! ](https://rockforttimes.in/former-minister-vellamandi-natarajans-son-jawaharlal-nehru-gets-a-position-in-aiadmk/): திருச்சியை சேர்ந்தவர் வெல்லமண்டி நடராஜன். இவர் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவரது மகன் ஜவஹர்லால் நேரு. இவரும் அதிமுகவில் பயணித்து வருகிறார். கட்சிப் பணிகள் மற்றும் கழகம் அறிவிக்கும் போராட்டங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் அ.இ.அ.தி.மு.கழக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக ஜவஹர்லால் நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜவஹர்லால் நேருவுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை மற்றும் சால்வை அணிவித்தும், பூச்செண்டு கொடுத்தும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   - [மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு மக்கள் நலத்திட்டங்களால் மகுடம் சூடியவர் கதிரவன்...* சாதனைகளை பட்டியலிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!](https://rockforttimes.in/kathiravan-crowned-mannachanallur-constituency-with-public-welfare-schemes-deputy-chief-minister-udhayanidhi-stalin-campaigned-by-listing-his-achievements/): நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடுகிற வேட்பாளர்களை ஆதரித்து, தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அதன் ஒரு பகுதியாக, திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரான கதிரவனை ஆதரித்து நம்பர் ஒன் டோல்கேட்டில் இன்று( ஏப்ரல் 11) பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது., “மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கதிரவனை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த தேவையில்லை. அவர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர். எளிதில் மக்களை சந்தித்து அவர்களது கோரிக்கைக்கு தீர்வு காணக்கூடியவர். கடந்த ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தபோது மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு ஏராளமான மக்கள் நல பணிகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக  ரூ.55கோடி மதிப்பீட்டில் தொகுதி முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு 140 வகுப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளார். மேலும், ரூ.120கோடி மதிப்பீட்டில் தொகுதி முழுவதும் உள்ள தார் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் தொகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி […] - [லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டல் விடுவிப்பு...!](https://rockforttimes.in/sandeep-mittal-relieved-from-the-post-of-dgp-of-the-anti-corruption-department/): தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்து வருகிறது. அந்தவகையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அந்த துறையின் புதிய டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமனம் செய்யப்பட்டு இருந்தார். இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழக தலைமைச் செயலாளரை மாற்றியும், பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை இயக்குநராகவும் நியமித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைத் திரும்பப் பெற வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கு திமுக எம்.பி.யும், நாடாளுமன்ற மக்களவை குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பொறுப்பில் இருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தீப் மிட்டல் ஆயுதப்படை டிஜிபியாக செயல்படுவார் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. - ["வாகை சூடும் வரலாறு திரும்ப போகிறது": 10 நாட்கள் வீடு, வீடாக சென்று ஆதரவு திரட்டுங்கள்... விஜய் ...!](https://rockforttimes.in/the-history-of-the-election-is-repeating-itself-go-door-to-door-for-10-days-and-gather-support-vijay/): வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் வெற்றி கழகம் தனித்து போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாளை(ஏப்ரல் 12) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 தொகுதி த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இந்நிலையில் விஜய், எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேர்தல் நாள் வேகமாக நெருங்கி வரும் இந்த வேளையில் ஒரு வேண்டுகோள். வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்களாகத் தங்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக்கொண்டு நம்மோடு தோழர்களாகப் பயணிப்பவர்கள், கழகத்தின் மீது பேரன்பு கொண்டுள்ள என்னுடைய நண்பா, நண்பிகள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள். அடுத்த 10 நாட்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் காலை, மாலை என இரு வேளையும் அவரவர் வசிக்கும் இடங்களில் தினமும் நம் சொந்தங்களாகிய தமிழ்நாட்டு மக்களை வீட்டுக்கு வீடு தேடித் தேடி நேரில் சந்தியுங்கள். நமது கழக வேட்பாளர்களுக்கு விசில் சின்னத்தில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் […] - [எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகை: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! (வீடியோ இணைப்பு)](https://rockforttimes.in/edappadi-palaniswami-arrives-in-trichy-a-rousing-welcome-at-the-airport-video-link/): அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர் இன்று(11-04-2026) சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தும், பூச்செண்டுகள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிறப்புரையாற்றுகிறார். - [தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமார் மாற்றம்: தேர்தல் கமிஷன் அதிரடி...!](https://rockforttimes.in/tamil-nadu-home-secretary-neeraj-kumar-changed-election-commission-takes-action/): தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. இதையொட்டி, தேர்தலை நியாயமாக நடத்தும் பொருட்டு, பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஏப்ரல் 11) தமிழக உள்துறை செயலர் தீரஜ்குமாரை மாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. புதிய செயலாளராக மணிவாசன் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைமைச் செயலர் முருகானந்தம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி டேவிட் தேவாசீர்வாதம் ஆகியோர் மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. - [திருச்சியில் உள்ள ஒரு கடையில் ஆபத்தான முறையில் கரும்புச்சாறு பிழியும் சிறுவர்கள்...! * குழந்தை தொழிலாளர் தடுப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? (வீடியோ இணைப்பு)](https://rockforttimes.in/children-squeezing-sugarcane-juice-in-a-dangerous-manner-at-a-shop-in-trichy-will-the-child-labor-prevention-department-officials-take-action-video-link/): அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கடுமையாக கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் தாகம் தணிக்க தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு போன்றவற்றை வாங்கி சாப்பிட்டும், இளநீர், குளிர்பானங்கள் பழச்சாறு, கரும்புச்சாறு போன்றவற்றை வாங்கி அருந்தி தாகம் தணித்து வருகின்றனர். வெயில் காரணமாக ஆங்காங்கே சாலையோரங்களில் தற்காலிக கடைகளும் புற்றீசல் போல பெருகி வியாபாரம் ‘ படு ஜோராக’ நடைபெற்று வருகிறது. இதில், வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் சிறுவர், சிறுமிகளையும் சில கடைகளில் நிறுத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக சத்திரம் பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு கடையில் இயந்திரம் மூலம் இரு சிறுவர்கள் கரும்புச்சாறு பிழிந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்தியாவில், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு ஆபத்தான தொழில்களிலும் ஈடுபடுத்தக் கூடாது என்பது சட்டமாகும். அவ்வாறு பணியமர்த்துவது குற்றமும் ஆகும். மீறுவோருக்கு 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 முதல் […] - [ரஜினிகாந்த், தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...!](https://rockforttimes.in/bomb-threats-to-rajinikanth-and-dhanushs-homes/): சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.இந்நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் ஆகியோர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக டிஜிபி அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு வந்த இமெயில் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. ஆகவே, இது வெறும் புரளி என்பது தெரிய வந்தது. இருந்தாலும் நடிகர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். - [100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சியில் சிலம்பம் சுற்றியவாறு விழிப்புணர்வு பேரணி...!](https://rockforttimes.in/awareness-rally-around-silambam-in-trichy-emphasizing-100-percent-voting/): நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும், அனைவரும் தவறாது தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் இளையோர் சங்கம் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சிலம்ப வீராங்கனைகள் சிலம்பம் சுற்றியவாறு கலைக்காவிரி நுண்கலை கல்லூரியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். - [கன்னியாகுமரியில் நாளை(ஏப்.12) விஜய் தேர்தல் பிரச்சாரம்:* 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு 6 மணி நேரம் மட்டுமே அனுமதி!](https://rockforttimes.in/vijays-election-campaign-in-kanyakumari-tomorrow-april-12-only-6-hours-allowed-for-6-assembly-constituencies/): தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடுகிறது. அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பேசி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருக்கிறது. குறிப்பாக, இளைஞர்கள், இளம்பெண்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி காணப்படுகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் செய்த அவர் நேற்று மதுரை மற்றும் காரைக்குடியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நாளை(ஏப்ரல் 12) கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார். நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்கிறார். நாளை கன்னியாகுமரிக்கு வருகை தரும் விஜய், அங்குள்ள விவேகானந்தர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் முன் நின்று செய்து வருகின்றனர். இந்த கூட்டத்திற்கு பல்வேறு நிமந்தனைகளுடன் காவல்துறை அனுமதி அளித்துள்ளதாக […] - [விராலிமலையில் 'வாக்கிங்' சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!](https://rockforttimes.in/chief-minister-m-k-stalin-went-walking-in-viralimalai-and-collected-votes/): தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து. 2-ம் கட்டமாக நெல்லையிலும், 3-ம் கட்டமாக கடந்த 6-ந்தேதி புதுச்சேரியிலும் பிரச்சாரம் செய்தார். நேற்று 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தஞ்சையில் இருந்து தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். இன்று( ஏப்ரல் 11) புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இந்நிலையில் விராலிமலையை அடுத்த இலுப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அப்பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்தார். பேருந்தில் ஏறி […] - [திருச்சி மாநகரில் பட்டப் பகலில் பட்டா கத்தியோடு பைக் பவனி...* இரும்புக்கரம் கொண்டு அடக்குவாரா சிட்டி போலீஸ் கமிஷனர்? ( வீடியோ இணைப்பு)](https://rockforttimes.in/daytime-bike-rally-with-machetes-in-trichy-will-police-take-strict-actionvideo-link/): தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தலைவிரித்து ஆடுகிறது. கடந்த நவம்பர் 10ம்தேதி முதல்வர் அரசு நிகழ்ச்சிக்காக திருச்சி வந்திருந்தபோது, முன்விரோதம் காரணமாக தாமரைச்செல்வன் என்ற இளைஞர் பீமநகர் காவலர் குடியிருப்பிற்குள் புகுந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வெட்டி கொலை செய்யப்பட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட, திருவெறும்பூர் அருகேயுள்ள கூத்தைப்பார் பேருராட்சி கவுன்சிலர் ஒருவர் நள்ளிரவில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சி மக்களை பீதியில் ஆழ்த்தியது. இப்படி நாள்தோறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதால் மாநகரின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், நேற்று ( ஏப்ரல் -10ம் தேதி ) மதியம் சுமார் 12 மணியளவில் திருச்சி மாநகரின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் டி.வி.எஸ். டோல்கேட்டிலிருந்து போஸ்ட் ஆபிஸ் சிக்னல் செல்லும் சாலையில், குட்ஷெட் மேம்பாலம் அருகே இரண்டு இளைஞர்கள் பைக்கில் […] - [திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளை திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்...! ](https://rockforttimes.in/udhayanidhi-stalin-to-campaign-in-trichy-tomorrow-in-support-of-dmk-candidates/): நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளைய தினமான ஏப்ரல் 11-ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். அதன்படி, லால்குடி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும்  பாரிவள்ளலை ஆதரித்து மாலை 3 மணிக்கு லால்குடி ரவுண்டானாவிலும், தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தொகுதியில் போட்டியிடும் சி.கதிரவனை ஆதரித்து நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா அருகில் மாலை 4 மணி அளவிலும், அதைத்தொடர்ந்து ஸ்ரீரங்கம் வேட்பாளர் துரைராஜை ஆதரித்து திருவானைக்கோவில் நாலுகால் மண்டபம் அருகில் மாலை 4-30 மணி அளவிலும், திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கே.என்.நேருவை ஆதரித்து தென்னூர் அரசமரம் அருகில் மாலை 5 மணி […] - [செய்தியாளர்கள்-விஜய் பவுன்சர்கள் இடையே தள்ளுமுள்ளு: திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு..!](https://rockforttimes.in/clash-between-journalists-and-vijay-bouncers-tension-at-trichy-airport/): தமிழ்நாட்டில் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், புதிதாக களமிறங்கியுள்ள தவெக தலைவர் விஜய் பல்வேறு இடங்களில் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று (10-04-26) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை விமான நிலையத்தில் இருந்து காலை 10 மணியளவில் சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் காரைக்குடி சென்ற விஜய்க்கு ஏராளமான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து அவர் பிரச்சார வாகனத்தில் நின்றபடி தொண்டர்களை சந்தித்து சென்றதால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்ததால் திட்டமிட்ட இடத்தில் விஜய் பேசாமல் அங்கிருந்து திருச்சிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டார். இதனால் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். திருச்சி விமான நிலையத்தின் பொதுப் பகுதியில் செய்தி சேகரிக்க முயன்ற செய்தியாளர்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலைத் தடுக்கவும் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு […] - [தேர்தல் பரிசு மழை: 5 பவுன் தங்கம், ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்குவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு..!](https://rockforttimes.in/election-gift-rain-o-panneerselvam-announces-to-give-5-pounds-of-gold-and-rs-1-lakh-in-cash/): தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவிப்பதுடன், மற்ற கட்சிகளை விமர்சித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த அவர், தற்போது திமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், போடிநாயக்கனூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிக வாக்குகள் பெற்றுத்தரும் பூத் முகவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், அதிக வாக்குகள் பெறும் ஒவ்வொரு ஒன்றியச் செயலாளருக்கும் 5 பவுன் தங்கப் பதக்கம் […] - [தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத் பதவியில் இருந்து நீக்கம்..!](https://rockforttimes.in/tamil-nadu-mahila-congress-president-hasina-syed-removed-from-post/): தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பையெடுத்து திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவை குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோர் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருந்தனர். தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஹசீனா சையத், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி அவரை தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தலைமை தமக்கு வாய்ப்பு வழங்க முன்வந்தபோதும், இடையீட்டால் அது கிடைக்கவில்லை என ஹசீனா சையத் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - [திருச்சி மேற்குத் தொகுதியில் சூறாவளி பிரச்சாரம்: வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டிய அமைச்சர் கே.என். நேரு..!](https://rockforttimes.in/intense-campaign-in-tiruchy-west-constituency-minister-k-n-nehru-seeks-support-by-going-door-to-door/): திருச்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட கோரிமேடு புது தெரு, புத்தடி மாரியம்மன் கோயில் தெரு, ஒண்டி கருப்பண்ணசாமி கோயில், சின்ன மிளகுபாறை ராஜா காலனி மற்றும் எஸ்பிஐ காலனி பகுதிகளில் திமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.என். நேரு வெள்ளிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில், திருச்சி மேற்குத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என். நேரு, தொகுதி முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, திருச்சி மிளகுபாறை பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். பிரசாரத்தின் போது, அந்த பகுதி பெண்களுடன் கலந்துரையாடிய அவர், திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இல்லத்தரசிகளுக்கான வாக்குறுதிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். கடந்த தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். அடுத்து […] - [கருத்துக்கணிப்பால் பதற்றம்: எடப்பாடியை நேரடியாக தாக்கிய அன்பில் மகேஸ் பொய்யாமொழி..!](https://rockforttimes.in/shaken-by-opinion-polls-anbil-mahesh-poiyamozhi-attacks-edappadi/): திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான முனைவர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இன்று(ஏப்.10) திருவெறும்பூர் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை, ஐயம்பட்டி, ரெட்டியார் தோப்பு, பெரியார் நகர், காமாட்சி அம்மன் நகர், லூர்து நகர் மற்றும் பத்தாளபேட்டை ஊராட்சிக்குட்பட்ட மேல மங்காவனம், கீழ மங்காவனம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் சுமார் ₹32.20 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல், திருவெறும்பூர் தொகுதியில் மொத்தமாக ₹450 கோடி மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதி மக்களின் கோரிக்கையான சிறிய பாலம் அமைக்கும் பணி தேர்தல் முடிந்த 30 நாட்களுக்குள் தொடங்கப்படும். அதற்கு அடிக்கல் நாட்ட நானே மீண்டும் வருவேன். ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு துரோகம் இழைக்கிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய […] - [காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்: வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்..!](https://rockforttimes.in/vijay-left-without-speaking-in-karaikudi-supporters-who-waited-in-the-scorching-sun-were-disappointed/): காரைக்குடிக்கு பிரசாரத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசாமல் சென்றதால் வெயிலில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபம் அருகே தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். சென்னையில் இருந்து மதுரைக்கு தனி விமானம் மூலம் சென்ற அவர், அங்கிருந்து பிரசார வாகனம் மூலம் காரைக்குடிக்கு சென்றார். ஆனால் வழிநெடுங்கிலும் தவெக தொண்டர்களும் ரசிகர்களும் குவிந்திருந்த நிலையில், பிரசார வாகனத்தின் மேலே நின்றபடி 4 மணிநேரத்துக்கும் மேலாக விஜய் சாலைவலம் மேற்கொண்டார். இதனால் பிரசாரத்துக்காக தேர்தல் ஆணையம் வழங்கிய பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை உள்ள நேரத்திற்குள் அவர் வர முடியவில்லை. பிரசாரத்துக்கு அனுமதி பெறப்பட்ட இடத்துக்கு பிற்பகல் 2.40 மணியளவில் வந்த விஜய், காரைக்குடி வேட்பாளர் பிரபுவை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு பேசாமல் அங்கிருந்து புறப்பட்டார். இதனால் பிரசாரம் நடைபெறும் […] - [தேர்தல் பாதுகாப்பு தீவிரம்: அதிகாரிகளுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை..!](https://rockforttimes.in/election-security-intensified-dgp-sandeep-sai-rathore-issues-circular-to-officials/): தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக அனைத்து டிஜிபி, ஏடிஜிபி மற்றும் ஐஜிக்களுக்கு டிஜிபி சந்தீப் சாய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், வாரந்தோறும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நடைபெறும் தேர்தல் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், நட்சத்திர அரசியல் தலைவர்களின் பரப்புரை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுவிதா இணையதளம் மூலம் அனுமதி கோருபவர்களுக்கு உரிய நேரத்தில் அனுமதி வழங்கப்படுகிறதா?  என்பது குறித்து ஆய்வு செய்யவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், சிறை கைதிகளில் எத்தனை பேர் வாக்களிக்கத் தயாராக உள்ளனர் என்பது தொடர்பான விவரங்களை சேகரிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. - [தாய்க்காக களமிறங்கிய மகள்கள்... சௌமியா அன்புமணிக்கு வாக்கு சேகரிப்பு..!](https://rockforttimes.in/daughters-campaigning-for-their-mother-collecting-votes-for-sowmiya-anbumani/): தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தங்களது தாயார் சௌமியா அன்புமணிக்காக அவரது மகள்கள் சங்கமித்ரா மற்றும் சம்யுத்ரா இருவரும் தருமபுரி தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். தொகுதியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அடங்கிய நோட்டீஸ்களை அவர்கள் வீடு வீடாக வழங்கி ஆதரவு திரட்டினர். - [மீண்டும் மீண்டும் விஜய் பிரச்சார வாகனத்தை பின்தொடர்ந்து சென்று விபத்தில் சிக்கிய இளைஞர்கள்..!](https://rockforttimes.in/youths-who-repeatedly-followed-vijays-campaign-vehicle-and-got-into-an-accident/): தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்குசேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். இதற்காக விஜய் மதுரையில் இருந்து பிரசார வாகனம் மூலம் சாலை வழியாக காரைக்குடி செல்கிறார். இந்நிலையில், இன்று காலை விஜய் பிரசார வாகனத்தில் காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவரின் பிரசார வாகனத்தை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் பைக்கில் பின்தொடர்ந்தனர். மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விஜய் பிரசார வாகனத்தை பின்தொடர்ந்த இரு இளைஞர்கள் விபத்தில் சிக்கினர். இளைஞர்கள் சென்ற பைக் சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் மருத்துவமனையில் […] - [மக்களின் அன்பில் நனைந்தபடியே மெட்ரோ ரயில் பயணம்… முதல்வர் மு.க. ஸ்டாலின்](https://rockforttimes.in/metro-rail-journey-soaked-in-the-love-of-the-people-chief-minister-m-k-stalin/): தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியினர் பிரசாரம், வாக்கு சேகரிப்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று(ஏப்.10) சென்னை மெட்ரோ ரெயிலில் பயணித்து வாக்கு சேகரித்தார். சென்னை சென்டிரலில் இருந்து தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயணிகளுடன் கலந்துரையாடி வாக்கு சேகரித்தார். பின்னர் மெட்ரோ நிலைய வளாகத்தில் முதல்-அமைச்சருடன் பயணிகள் கலந்துரையாடி செல்பி எடுத்துக் கொண்டனர். இதனிடையே, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(ஏப்.10) மாலை தஞ்சையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். அவர் தஞ்சையில் உள்ள 8 தொகுதிகளைச் சேர்ந்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். - [கடலூரில் அரசியல் திருப்பம்...- உதயநிதி பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு..!](https://rockforttimes.in/political-twist-in-cuddalore-permission-denied-for-udhayanidhis-campaign/): தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. வரும் 21-ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் காலை, மாலை என பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினமும் பல தொகுதிகளில் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க. தலைவர் விஜய், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், கடலூரில் நாளை(ஏப்.11) விஜய் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, […] - [காரைக்குடியில் த.வெ.க.தலைவர் விஜய் இன்று (ஏப்.10)பிரச்சாரம்...!](https://rockforttimes.in/tvk-leader-vijay-to-campaign-in-karaikudi-today-apr-10/): தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து இன்று (வெள்ளிக்கிழமை) காரைக்குடியில் பிரசாரம் செய்ய உள்ளார். இன்று காலை மதுரை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அவர், மேலூர் மற்றும் திருப்பத்தூர் வழியாக காலை 11.30 மணியளவில் காரைக்குடி வருகிறார். பின்னர் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வ.உ.சி. சாலை, கழனிவாசல், வாட்டர் டேங்க் வழியாக தேவர் சிலை வரை திறந்த வேனில் நகர்வலமாக சென்று ஆதரவு திரட்டுகிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் தேவர் சிலை முன்பு திறந்த வேனில் நின்று பொதுமக்களிடம் உரையாற்றுகிறார். இந்த பிரசாரத்திற்கு போலீசார் 37 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளனர். முக்கியமாக, மதியம் 12.30 மணி முதல் […] - [திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு...!](https://rockforttimes.in/final-list-of-candidates-for-9-assembly-constituencies-in-trichy-district-announced/): தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று( ஏப்.9) மாலை அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் பெயர் விவரம் வருமாறு:- திருச்சி கிழக்கு: தி.மு.க. – இனிகோ இருதயராஜ் அ.தி.மு.க. – க.ராஜசேகரன் த.வெ.க. – ஜோசப் விஜய் நா.த.க. – கிருஷ்ணசாமி திருச்சி மேற்கு: தி.மு.க. – கே.என்.நேரு அ.ம.மு.க. – ராஜசேகரன் த.வெ.க. – ராமமூர்த்தி நா.த.க. – புவனேஸ்வரி ஸ்ரீரங்கம்: தி.மு.க. – எஸ்.துரைராஜ் அ.தி.மு.க. – ஆர்.மனோகரன் த.வெ.க. – ரமேஷ் நா.த.க. – தர்மராஜ். திருவெறும்பூர்: தி.மு.க. – அன்பில் மகேஷ் பொய்யாமொழி அ.தி.மு.க. – ப.குமார் த.வெ.க. – நவல்பட்டு விஜி நா.த.க. – ராஜேஷ் மணப்பாறை: ம.நே.ம.க. – அப்துல் சமது அ.தி.மு.க. – டாக்டர் பி.எல்.விஜயகுமார் த.வெ.க. – கதிரவன் நா.த.க. – அருணகிரி லால்குடி: தி.மு.க. […] - [விஜய் மூலம் ரூ.5,000 கோடி சம்பாதிக்கலாம் என கணக்கு போட்டார் இபிஎஸ்... * செங்கோட்டையன் 'பகீர்' குற்றச்சாட்டு!](https://rockforttimes.in/ibs-calculates-that-5000-crore-can-be-earned-through-vijay-sengottaiyan-faces-pakheer-accusation/): விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையனுக்கு கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அவர் கோபி அருகே நம்பியூரில் தேர்தல் பரப்புரையின் போது பேசியதாவது:- “முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் ஒரு பொற்காலமாக இருந்தது. அவரது மறைவிற்குப் பிறகு, அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது தமிழகத்தில் இரண்டு பெயர்கள் தான் முன்நின்றன. ஒன்று நான், மற்றொன்று எடப்பாடி பழனிசாமி. அப்போது நான் அவரிடம், எனக்கு முதல்வர் பதவியை விடக் கழகம் உடைந்துவிடக் கூடாது என்பதே முக்கியம் என்று கூறிவிட்டு, அனைவரும் இணைந்து பணியாற்ற வழிவகை செய்தேன். எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆன பிறகும், நாம் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்று தான் நான் கூறினேன். ஆனால், 1989ல் கழகத்திற்கு வந்து, அனைத்துப் பதவிகளையும் அனுபவித்துவிட்டு, இன்று கட்சிக்காக உழைப்பவர்களையே நீக்குகிறார்கள் என்றால் அதன் போக்கை நீங்களே பாருங்கள். பத்து முறை வேட்புமனுத் […] - [தனது வெற்றிக்காக மர்மமான முறையில் மிருக பலி கொடுத்த ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரால் சர்ச்சை...!](https://rockforttimes.in/controversy-erupts-as-srirangam-aiadmk-candidate-allegedly-performs-a-mysterious-animal-sacrifice-for-electoral-victory/): திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் ஆர்.மனோகரன். இந்த தொகுதியில் முத்துராஜா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பரவலாக வசித்து வருகின்றனர். அந்த முத்துராஜா இனத்தை கடந்த காலங்களில் பலமுறை இழித்தும், பழித்தும் பலமுறை பேசிய, ஆர்.மனோகரனுக்கு திடீரென வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முத்துராஜா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், வேட்பாளர் ஆர்.மனோகரனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒத்து வராது. அதேபோல டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து விலகி, சமீபத்தில் அதிமுகவில் சேர்ந்த இவருக்கு ‘சீட்’ வழங்கப்பட்டதால் உண்மையான இரட்டை இலை கட்சியினரும் ஆர்.மனோகரனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. திமுகவில் உள்ள அதிருப்தி கட்சிக்காரர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கும் ஆர்.மனோகரனின் தரப்பினர், ஆளுக்கு தகுந்தவாறு கரன்சி கட்டுகளை சத்தமில்லாமல் ஒப்படைத்து வருகிறார்களாம். எனவே இந்த முறை நான் தான் எம்எல்ஏ என்கிற ரேஞ்சுக்கு ஶ்ரீரங்கம் தொகுதி முழுவதும் ‘பில்டப்’ கொடுத்து வருகிறார் ஆர்.மனோகரன். ஆனால், உள்ளுக்குள் தோல்வி பயம் அவருக்கு வந்து, வந்து போகிறதாம். இதனால் அவர், […] - [புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவுக்கு 90 சதவீதம் வாக்குப்பதிவு..!](https://rockforttimes.in/a-record-90-voter-turnout-in-puducherry-the-highest-ever-recorded/): தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், புதுச்சேரி, அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. புதுச்சேரி,,கேரளம் அசாம் ஆகிய மூன்று மாநிலங்களில் இன்று(ஏப்.9) தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்த நிலையில், முன் எப்போதும் இல்லாத வகையில், புதுச்சேரியில் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி மொத்தம் 86.87 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 90 சதவீதத்தை தாண்டி வாக்குகள் பதிவாகியுள்ளது. இது, புதுவையில் முன் எப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சமாகும். கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது புதுவையில் மொத்தம் 83.4 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது. - [திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் இடங்கள் அறிவிப்பு...!](https://rockforttimes.in/announcement-of-the-places-where-votes-will-be-counted-in-the-9-assembly-constituencies-in-trichy-district/): தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிற 23-ந்தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், முசிறி,,லால்குடி, துறையூர் (தனி) ஆசிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி திருச்சி ஜமால் முகமது கல்லூரி மற்றும் புலிவலம் ஓயாசிஸ் இன்ஸ்டி டியூட் ஆஃப் டெக்னாலஜி ஆகிய இடங்களில் நடைபெறும் என்று திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான வே.சரவணன் தெரிவித்துள்ளார். - [முசிறியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை: ரூ.3 லட்சம் பறிமுதல்...!](https://rockforttimes.in/election-flying-squad-vehicle-search-in-musiri-rs-3-lakh-seized/): தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மாவட்டம், முசிறி, கரிகாலி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் விமலா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்த கரிகாலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் 2 லட்சத்து 11ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு முசிறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று முசிறி அருகே காவிரி பெரியார் பாலத்தில் நிலையான கண்காணிப்பு அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் […] - [நெல்லையில் விஜய்க்கு கூடிய கூட்டத்தை இதுவரை நான் பார்க்கவில்லை... * நயினார் நாகேந்திரன் 'மழுப்பல்' பதில் !](https://rockforttimes.in/i-have-never-seen-a-crowd-gathered-for-vijay-in-nellai-nayinar-nagendrans-mazhuppal-reply/): தமிழக சட்டமன்ற தேர்தல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வேட்பாளர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை என்.கணேசராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து, பாஜக மாநில தலைவரும், சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் இன்று (ஏப்.9) நெல்லை பேட்டையில் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லைக்கு விஜய் வந்த போது அவருக்கு பெரும் கூட்டம் கூடியதாக பேசுகிறார்கள். நான் அதை பார்க்கவில்லை. பார்த்தால்தான் கருத்து தெரிவிக்க முடியும். விஜய்க்கு வரும் கூட்டம் பற்றி எங்களுக்கு கவலையில்லை. ஏனெனில், எம்ஜிஆர் காலத்தில் இருந்தே நெல்லை தொகுதி அதிமுகவின் இரும்புக் கோட்டை. இந்த தேர்தலிலும் அதை நிரூபிக்கும். மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு, தமிழகத்திற்கு ரூ.14 லட்சம் கோடி நிதி தந்துள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால், காங்கிரஸ் […] - [மணப்பாறை வேட்பாளர் அப்துல் சமதுவை ஆதரித்து அமைச்சர் அன்பில் மகேஷ், ஜோதிமணி எம்.பி. வாக்கு சேகரிப்பு...!](https://rockforttimes.in/minister-anbil-mahesh-jothimani-mp-gather-votes-in-support-of-manapparai-candidate-abdul-samad/): திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க கூட்டணி கட்சி (மனிதநேய மக்கள் கட்சி) வேட்பாளர் அப்துல் சமதுவை ஆதரித்து மருங்காபுரி வடக்கு ஒன்றியம், ஊத்துக்குளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது, திராவிட மாடல் அரசு மீண்டும் மலர்ந்திட, திட்டங்கள் தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்திட கேட்டுக் கொண்டனர். அப்போது அவர்களுடன் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறுகையில், இந்த தேர்தல் முதல்வர் சொன்னதுபோல் டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான தேர்தல். இதுபோன்று போட்டி வரும் போதெல்லாம் தமிழ்நாடு அணிதான் வென்றிருக்கிறது, அதேபோல, இந்த முறையும் தமிழ்நாடு அணிதான் வெல்லும் என்று கூறினார். - [தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி பேச வேண்டும் என்பது கூட தெரியவில்லை- * இபிஎஸ்க்கு திமுக கடும் கண்டனம்!](https://rockforttimes.in/they-dont-even-know-how-to-speak-in-the-election-campaign-dmk-strongly-condemns-eps/): தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரை தரக்குறைவாக பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக நிர்வாகி ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில், திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பை எடப்பாடியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் தெரியாது. கொரோனா உச்சத்தில் இருந்தபோது பிபிஇ கிட் அணிந்து கொரோனா வார்டுக்குள் சென்றவர் மு.க.ஸ்டாலின். மருத்துவமனைக்கு நேரடியாக சென்று கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை கேட்டறிந்தவர். தனது உயிரை துச்சமென மதித்து தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த கலைஞரின் மகன்தான் ஸ்டாலின். மு.க.ஸ்டாலின் […] - [தேர்தல் பிரச்சார வாகனத்தில் ஏறிய தொண்டரை கன்னத்தில் அறைந்த திருமாவளவன்...! (வீடியோ இணைப்பு)](https://rockforttimes.in/thirumavalavan-slapped-a-party-worker-who-got-into-the-election-campaign-vehicle-video-link/): தேனி மாவட்டம், பெரியகுளம் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விசிக தலைவர் திருமாவளவன் அக்கட்சியின் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பெருமளவிலான தொண்டர்கள் திரண்டிருந்த நிலையில், அவருடைய கட்சியினரைச் சேர்ந்த சிலர் திடீரென பிரச்சார வாகனத்தின் மீது ஏறி நின்றதால், அங்கு குழப்பமான நிலை உருவானது. பலமுறை எச்சரிக்கப்பட்டபோதும், அவர்கள் தொடர்ந்து வாகனத்தில் ஏறி இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த திருமாவளவன், வாகனத்தில் ஏறி தொந்தரவு செய்த ஒரு தொண்டரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. - [தமிழக அரசின் தலைமைச் செயலராக சாய்குமார், லஞ்ச ஒழிப்பு டிஜிபியாக சந்தீப் மிட்டல் பொறுப்பேற்பு...!](https://rockforttimes.in/saikumar-takes-charge-as-chief-secretary-of-the-tamil-nadu-government-sandeep-mittal-as-dgp-for-anti-corruption/): தமிழகத்தில் ஏப்​.23-ம் தேதி வாக்​குப்பதிவு நடை​பெறுகிறது. தேர்​தல் நடைபெறும் மாநிலங்​களில் 3 ஆண்​டு​களாக ஒரே இடத்​தில் பணி​யாற்​றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் மற்​றும் உயர் பொறுப்​பு​களில் இருப்​பவர்​கள், இதர அதி​காரி​களை மாற்ற இந்​தி​யத் தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டது. அதன்படி, தமிழகத் தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதம் ஆகியோரை தேர்​தல் ஆணை​யம் நேற்று திடீரென மாற்றி உத்தரவிட்டது. புதிய தலை​மைச் செயல​ராக எம்​.​சாய்​கு​மார், லஞ்ச ஒழிப்​புத் துறை டிஜிபி​யாக சந்​தீப் மிட்​டல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழக பிரி​வில் 1990-ம் ஆண்டு ஐஏஎஸ் அதி காரி​யான டாக்​டர் எம்​.​சாய்​கு​மார், பொதுப் பணித்​துறை செயலர், மின் வாரி​யத் தலை​வர், தமிழ்​நாடு தொழில் முதலீட்​டுக் கழகத் தலை​வர், செய்​தித்​தாள் காகித நிறு​வனத் தலை​வர் போன்ற முக்​கியப் பொறுப்​பு​களை வகித்​துள்​ளார். கடந்த அதி​முக ஆட்​சி​யில் முதல்​வ​ராக பழனி​சாமி இருந்த போது, முதல்​வரின் செயலர்​களில் முதன்​மை​யானவ​ராக சாய்​கு​மார் […] - [சீமான் போட்டியிடும் காரைக்குடியில் விஜய் நாளை ( ஏப்.10) தேர்தல் பிரசாரம்...!](https://rockforttimes.in/vijay-will-campaign-in-karaikudi-where-seeman-is-contesting-tomorrow-april-10/): தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று நெல்லை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்த போது அவருக்கு கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. அதனைத் தொடர்ந்து நாளை (10-04-2026) காரைக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டாக்டர் டி.கே.பிரபு உள்பட மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். காரைக்குடி தேவர் சிலை அருகே பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் பிரசார கூட்டத்திற்கு அனுமதி கேட்கப்பட்டு உள்ளது. இதையொட்டி தேர்தல் கமிஷன் அதிகாரிகள், போலீஸ் அதிகாரி கள் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத். காரைக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் புனியா மற்றும் அதிகாரிகள் குழுவினர் பிரசாரத்திற்கு அனுமதி கேட்கப் பட்ட தேவர் சிலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், காரைக்குடி தொகுதி […] - [கேரளம், புதுச்சேரி, அசாமில் வாக்குப்பதிவு...* நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றும் வாக்காளர்கள்...!](https://rockforttimes.in/voting-in-kerala-puducherry-assam-voters-waiting-in-long-queues-to-fulfill-their-democratic-duty/): தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் ஒரேகட்டமாக இன்று (09.04.2026) காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, அஸ்ஸாமில் உள்ள 126 தொகுதிகளிலும், கேரளாவில் உள்ள 140 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசார், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மே மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் எனப் பலரும் ஆர்வத்துடன்  வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில் கேரளம் மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள […] - [ஜி-பே யூஸ் பண்றீங்களா? பாக்கெட் மணி ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?* வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பு...!](https://rockforttimes.in/do-you-use-g-pay-if-you-click-on-the-pocket-money-icon-will-all-the-money-be-gone-whatsapp-audio-goes-viral/): இந்தியாவில் யுபிஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து அல்லது ஒரு மொபைல் நம்பரை உள்ளீடு செய்தாலே ஒரு குறிப்பிட்ட நபரின் கணக்கிற்கு நம்மால் எளிதாக பணத்தை அனுப்பி விட முடிகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்திய டிஜிட்டல் கட்டமைப்பில் கொண்டு வரப்பட்ட மேம்பாடுகளே இப்படி சுலபமான பணப்பரிமாற்றத்தை நமக்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எந்த அளவுக்கு பணப் பரிமாற்றங்களை எளிமையாக்கியதோ அந்த அளவுக்கு நிதி சார்ந்த மோசடிகளையும் அதிகப்படுத்தி இருக்கிறது. எனவே கூகுள்பே, போன் பே, பேடிஎம் உள்ள யுபிஐ செயலிகளை பயன்படுத்தும்போது நாம் முன்பை விட மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. அதில் கூகுள் பேயில் handshake செய்வது போன்ற பிஎம் என்ற ஒரு குறியீடு இருக்கிறது. அதனை கிளிக் செய்தால் […] - [பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களிலெல்லாம் கடுகடுக்கும் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் - முசிறியில் கருணைராஜாவுக்கு கஷ்ட காலமா ?](https://rockforttimes.in/union-secretary-ramachandran-who-is-a-hot-topic-wherever-he-goes-for-campaigning-is-it-a-difficult-time-for-karunai-raja-in-musiri/): திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் முன்னாள் வனத்துறை அமைச்சர் என்.செல்வராஜின் மகனான என்.எஸ் கருணை ராஜா. பொறியியல் பட்டதாரியான இவர், சொந்தமாக கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் போட்டியிடுகிற முசிறி தொகுதியில் முத்தரையர் சமூகத்தை சார்ந்தவர்களே பெரும்பான்மையாக இருப்பதால், இவரது வெற்றி வாய்ப்பும் பிரகாமாகவே இருப்பதாக சொல்லப்படுகிறது. அனைவரிடமும் யதார்த்தமாக பழகக் கூடியவர், கஷ்ட – நஷ்டங்களில் துணை நிற்கக் கூடியவர். கட்சியினரை மதிக்கத் தெரிந்தவர் என இவருக்கு ஏகப்பட்ட பிளஸ் பாயிண்டுகளும் இருக்கிறது. இவரது தந்தையான என்.செல்வராஜின் மறைவிற்குப் பிறகு ஆக்டிவ் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த கருணை ராஜாவுக்கு, திமுக தலைமை தற்போதைய தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளது. கிடைத்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் கருணை ராஜாவும் தேர்தல் களத்தில் கடினமாகவே உழைக்கிறாராம். ஆனால், முசிறி தொகுதிக்கு புதுமுகமான திமுக வேட்பாளரான இவருக்கு கட்சியினரை அறிமுகம் செய்யவும், பிரச்சாரத்தில் துணை நிற்கவும், […] ## Pages - [Ebook](https://rockforttimes.in/ebook/): [real3dflipbook id=’2′] - [youtube](https://rockforttimes.in/youtube/): [vc_row][vc_column][vc_wp_text][automatic_youtube_gallery type=”channel” channel=”UCxJdis7_GHjV1K8xW5_b1ng” cache=”2419200″][/vc_wp_text][/vc_column][/vc_row] - [ThemeNcode PDF Viewer SC [Do not Delete]](https://rockforttimes.in/themencode-pdf-viewer-sc/): This page is used for Viewing PDF. - [ThemeNcode PDF Viewer [Do not Delete]](https://rockforttimes.in/themencode-pdf-viewer/): This page is used for Viewing PDF. - [Front Page2](https://rockforttimes.in/front-page2/): Other ultra-long-haul international flights connecting in the United States include a Delta one from Atlanta to Johannesburg, South Africa ... - [Sample Page](https://rockforttimes.in/sample-page/): This is an example page. It’s different from a blog post because it will stay in one place and will show up in your site navigation (in most themes). Most people start with an About page that introduces them to potential site visitors. It might say something like this: Hi there! I’m a bike messenger by day, aspiring actor by night, and this is my website. I live in Los Angeles, have a great dog named Jack, and I like piña coladas. (And gettin’ caught in the rain.) …or something like this: The XYZ Doohickey Company was founded in 1971, […] - [Contact](https://rockforttimes.in/bs-contact/): Other ultra-long-haul international flights connecting in the United States include a Delta one from Atlanta to Johannesburg, South Africa ... - [Rockfort Times](https://rockforttimes.in/): Other ultra-long-haul international flights connecting in the United States include a Delta one from Atlanta to Johannesburg, South Africa ... [comment]: # (Generated by Hostinger Tools Plugin)