மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மற்றும் பத்மாவதி தம்பதியருக்கு மூத்த மகனாக பிறந்தவர் மு.க.முத்து. உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், இன்று( ஜூலை 19) காலை 8 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 77. சென்னை ஈச்சம்பாக்கத்தில் அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவருடைய உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்துவார் என்று கூறப்படுகிறது. மு.க.முத்துவின் மறைவை அவருடைய மனைவி சிவகாம சுந்தரி உறுதிப்படுத்தி உள்ளார். மு.க.முத்து மறைவை யடுத்து, தி.மு.க. நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
Comments are closed.